பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

மன்னனின் நாட்டுவளம், அவன் வெற்றிச் சிறப்பு, கொடைச் சிறப்பு இவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகின்றார்.

புரவலர் நாட்டுச் சிறப்பு

புலவர்கள் தாம் காணும் வள்ளலைப் பாடிப் பரவி நிற்கும்போது அவன்தன் நாட்டுச் சிறப்பினை வாழ்த்தி உரைப்பது மரபு. இந்த நிலையில் புறத்திணை நன்னாகனார் ஒய்மான் வில்லியாதனைச் சென்று காணும்போது அவன்தன் ஊராகிய மாவிலங்கையின் வளத்தைக் கூறிச் சிறப்பிக் கின்றார். நெல்லரி தொழுவர் தம்முடைய கூரிய வாள் வாய் மழுங்கி விட்டதெனின் பின்னரும் மறத்தோடு அரியவேண் டிச் சேற்றிலே கிடக்கும் யாமையின் வளைந்த முதுகினையே கல்லாகக் கொண்டு தீட்டும் நெற்பயிர் நெருங்கிய விளைவயல் களையுடைய மாவிலங்கை என அதன் சிறப்பினைக் கூறுகின்றார். இதனை ,

நெல்லரி தொழுவர் கூர்வாண் மழுங்கிற் பின்னை மறத்தோ டரியக் கல்செத்து அள்ளல் யாமைக் கூன்புறத் துரிஞ்சும் நெல்ல மல்புரவின் இலங்கை (புறம். 376) என்ற புறநானுாற்றுப் பகுதியால் தெளியலாம்.

மேலும் இந்த ஒய்மான் வில்லியாதனின் ஊர் அரணை அடுத்த ஆழ்ந்த அகழியினையும் நீண்ட மதிலினையும் உடையது. இவன் தன் திருமனையானது செல்வமிக்கது. இத்திருமனைக்கண் தோன்றும் நறிய புகை மழைமுகில்போல மறுகெல்லாம் நிறைந்து விளங்கும் என்பதனை,

திருவுடைத் திருமனை ஐதுதோன்றுகமழ்துகை

வருமழை மங்கலின் மறுகுடன் மறைக்கும்

குறும்படு குண்டகழ் நீண்மதி லூரே என்ற பாடல் அடிகளில் அறிவிக்கின்றார் ஆசிரியர் நன்னாக னார்.