பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் 5I

கரும்பனுார் கிழானின் வேங்கட நாட்டில் அருவிகள் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதை,

ஒலி வெள்ளருவி வேங்கட நாடன்

எனக் கூறுகின்றார். புறத்திணை நன்னாகனார் ஒய்மான் நல்லியக்கோடனின் நாட்டுச் சிறப்பினைப் பற்றிப் பேச வில்லை.

புரவலரின் கொடைச் சிறப்பு

தமிழக வரலாற்றை நோக்கும்போது மன்னர்கள் புலவரைப் போற்றும் செம்மல்களாகத் துலங்கினமையைக் காண்கின்றோம். புலவர் பாடும் புகழைப் பெறற்கரும் பெரும்பேறாகக் கருதியவர்கள் தமிழ் மன்னர்கள். புறத்திணை நன்னாகரின் நாவிசை நுவறலைப் பெற்ற ஒய்மான் நல்லியக்கோடன் தம்மை உள்ளி வந்தவர்க்கு வரையாது வழங்கும் வண்கையன். அவன்தன் வள்ளண் மையைப் புறத்திணை நன்னாகனார் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் போற்றுகின்றார். புலவரின் நைந்து கறை படிந்த உடையை நீக்கி நானுமடி கலிங்கம் நல்கி, அரவு வெகுண்டன்ன தேறலையும் சூட்டிறைச்சியை யும் தந்து நிரயத்தன்ன வறுமையை நீக்கும் கொடையாளன் என்பதை,

பண்டறி வாரா வுருவொ டென்னரைத் தொன்றுபடு துளையொடு பருவிழை போகி நைந்துகறை பறைந்த என்னுடைய நோக்கி விருந்தினன் அளியன் இவன் எனப் பெருந்தகை கின்ற முரற்கை நீக்கி நன்றும் அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு கிரயத் தன்னவென் வறன் களைந் தன்றே

என்ற பாடலடிகளில் வடித்துக் காட்டுகின்றார்.