பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

ஒய்மான் வில்லியாதன் இரவலர்க்கு குறுந்தாலேற்றைக் கொழுங்கண் நல்விளர் நறுநெய் உருக்கி நாட்சோறு ஈந்து பசிதீர்க்கும் வள்ளியன் என அவன் கொடைச்சிறப்பைப் பசிப்பிணி தீர்க்கும் மருத்துவனாய் விளங்கும் பான்மையைச் சித்திரிக்கின்றார்.

குறுந்தா ளேற்றைக் கொழுங்கண் கல்விளர்

நறுநெய் யுருக்கி நாள்சோ றீயா

வல்லன் எந்தை பசிதீர்த்தல் என

என்பது அப்பகுதி.

ஒலிவெள்ளருவி வேங்கடங் கிழவனாய் கரும்பனுாரன் ஊனும் ஊணும் முனையின் பாலிற் பெய்தவற்றையும், பாகிற் கொண்டவற்றையும் அளவாகக் கலந்து இனிதென விருந்தினர்க்கும் அளிக்கும் தகையன்,

இருநிலம் கூலம் பாறக் கோடை

வருமழை முழக்கிசைக் கோடிய பின்றையும் வாரி வழங்கும் நீர்மையன். மேலும் இக்கரும்பனுார் கிழான் உறுவருஞ்சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பி போன்றவன் என்றெல்லாம் அ வ ன் த ன் கொடைச் சிறப்பினைப் பாராட்டி உரைக்கின்றார்.

மேலும் இக்கரும்பனுார் கிழானின் கொடை நலத்தை மற்றொரு பாட்டில் விரித்துரைக்கின்றார். இவன் நெல்லும் பொன்னும் நறவும் மிக உடையவன். இரவலர்கள் அவற்றால் குறைவுறும்போதும் அவன் அவற்றைத் தந்துதவுபவன்.

கிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை

மண்ணானப் புகழ்வேட்டு

நீர் நான கெய்வழங்கி புரக்கும் இயல்புடையனாதலின் வெள்ளியாண்டு நிற்பினும் இரவலர்க்கு உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும், தின்ற