பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் 53

நண்பல் ஊன் தோண்டாவும் வழங்கும் வண்மையன் எனப் போற்றி உரைக்கின்றார்.

| |லவர் உள்ளம்

புறத்திணை நன்னாகரின் பாடல்களை நோக்கும்போது அவர்தம் புலமைச் செருக்கினையும் உறுதிப்பாட்டினையும் உள்ள விழைவினையும் நன்கு தெளியமுடிகிறது. ஒய்மான் நல்லியக் கோடனிடம் சென்று பரிசில் பெற்று வரும் புறத்திணை நன்னாகனார்,

இரவினானே யீத்தோன் எந் ைத அன்றை ஞான்றினோ டின்றி னுரங்கும் இரப்பச் சிந்தியேன்

எனக் கூறுகின்றார். இனி ஒரு மன்னனிடம் சென்று பரிசில் வேண்டி நிற்க மாட்டேன் எனக் கூறும் புலவர்தம் உள்ளத்து உறுதியினை இவ்வடிகள் உணர்த்தி நிற்கின்றன.

உளத்தின் நிகழ்வனவற்றை உள்ளத்தால் அளந்தறியும் விளங்குகின்ற புலமையையுடையவன்தான் என்பதை

உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்

எனக் கூறுவதால் புல வர்தம் புலமைச் செருக்கினை-தம் புலமையில் அவர் கொண்ட அசையா நம்பிக்கையை அறிய முடிகிறது.

ஒய்மான் வில்லியாதனைப் பற்றிப் பாடும்போது அவள் தன் அருள் நிழலில் வாழும் பேறு தனக்கு உண்டாக வேண்டும் என்றும், தன் நாவிசை நுவறலைப் பெறும் பேற்றினை அவன் பெறவேண்டும் என்றும் கூறுவது புலவர் தம் உள்ளத்து விருப்பத்தினை அறிவதற்கு வாயிலாக அமைகிறது. -