பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

好4 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

யானே பெறுக அவன் தானிழல் வாழ்க்கை அவனே பெறுக என்காவிசை நுவறல்

என்பது அப் பகுதி. ஒய்மான் நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்று மீண்டு வரும் புலவர் தம் உள்ளத்து மகிழ்ச்சியை நிறைக்குளப்புதவிற்கு உவமைப்படுத்தி உரைப்பதால் புலவரின் மன மகிழ்ச்சியையும் அறிய முடிகிறது.

புரவலர் மாட்சி

ஒய்மான் நல்லியக்கோடன் வறுமையை வீட்டுப் புணையாக இருந்தமையை,

கிரப்படு புணையின்

என்ற தொடர்வழி உணர்த்துகின்றார் புலவர் புறத்திணை நன்னாகனார். மேலும் அவன் நேரம் காலம் பார்க்காமல் வழங்குபவன் என்பதை,

இரவினானே ஈத்தோன் எந்தை எனக் குறிக்கின்றார்.

கரும்பனுார் கிழான் உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பி போன்றவன். மேலும் அவன் கொண்ட கொள்கையினின்றும் மாறாதவன் என்பதை,

உறுவருஞ் சிறுவரும் ஊழ்மா னுய்க்கும்

றிருங்கோ ளிராப் பூட்கைக் கரும்ப னுாரன் காதன் மகனே

என்ற பாடல் அடிகள் உணர்த்தி நிற்கின்றன. இவன் இல்லை என்று வரும் இரவலர்களிடம் பெரிதும் அன்புடை யவன். இரவலர்கள் தன்னுடன் நீண்ட நாள் தங்கியிருந்து பின்னர் பிரிந்து செல்கின்றார் எனில்,