பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் 55

துணரியது கொளா வாகிப் பழமூழ்த்துப் பயம்பகர் வறியா மயங்கரின் முதுபாழ்ப் பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண் ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி

விதார் வார்பின் சிதர்ப்புறத் தடாரியின் ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணி பாடித்தம் இலம்பாட்டினை நீக்கிக் கொள்வது துன்பம் தரும் செயல் ஆதலின் இரு நிலம் கூலம் பாறக் கோடை வருமழை முழக்கிசைக்கு ஒடிய பின்னரும் அண்மையில் இருந்த போதிலும், சேய்மையில் இருந்த போதிலும் தன்னிடம் வருக எனக் கூறுவது அவன்தன் உயர்ந்த உள்ளத்தைப் புலப்படுத்தி நிற்கிறது.

புலவர் புரவலரை அணுகும் முறை

புறத்தினை நன்னாகனார் பாடல்களை நோக்கும்போது புலவர் புரவலர்களைத் தனித்தும் தம் இரும்பேர் ஒக்கலுடனும் சென்று கண்ட இரு நிலைமையினை அறிய முடிகிறது. தனித்துச் செல்லும்போது தாமாகவே செல்லல், அப் புரவலன் புகழினைப் பிறர் கூறக்கேட்டு அதனால் விருப்புற்றுச் செல்லல் ஆகிய இரண்டு முறைகளைக் காண் ேெறாம். ஒய்மான் நல்லியக்கோடனைத் தனித்துச் சென்று கண்டார் என்பதை,

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங் கந்தி சிறுநணி பிறந்த பின்றைச் செறிபிணிச் சிதாஅர் வன்பின் என் தொடார் தழி இப் பாணர் ஆடும் அளவை யான்றன் யானர் நன்மனைக் கூட்டுமுதல் கின்றனென்

என்றதனால் தெளியலாம். ஒய்மான் வில்லியாதனின் பெருமைகளை அவன் இணைவன் கூறக்கேட்டு அதனால் மிக்க வேட்கை யொடு அவனை உள்ளிச் சென்றமையை,