பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

கொன்வரல் வாழ்க்கை கின்கிணைவன் கூறக் கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது விண்டோம் தலைய குன்றம் பின்படர நசை தர வந்தன ன் யானே

என்பதனால் அறியலாம். கரும்பனுார் கிழானைக் கரும்பு முதல் சுற்றமொடு சென்று கண்டமையை,

ஊனும் ஊணும் மனையின் இனிதெனப்

பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்

அளவுபு கலந்து மெல்லிது பருகி

விருந்துறுத் தாற்றி யிருந்தன மாக என்ற புறநானுாற்றுப் பாடல் பகுதி புலப்படுத்தி நிற்கின்றது.

கரும்பனூரன் கினையேம் பெரும

என்றதனால் அவன் இரும்பேர் ஒக்கலுடன் சென்று கண்டமையை உணர முடிகிறது.

புறத்திணை நன்னாகனார் ஒய்மான் நல்லியக்கோடனை அந்தி மாலைப் போதில் சென்று கண்டதை,

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்

பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங் கந்தி

சிறுநணி பிறந்த பின்றை செறிபினிச் என்ற பகுதியால் உணரலாம். பிற மன்னர்களை இவர் சென்று கண்ட நேரத்தை இவர் பாடல்கள் குறித்து நிற்க வில்லை.

அறியப்படும் ஊர்கள்

புறத்தினை நன்னாகனார் பாடல்களினின்றும் மா விலங்கை கரும்பனூர் என்ற இரண்டு ஊர்களைப் பற்றி