பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினை நன்னாகனார் பாடல்கள் 57

அறிய முடிகிறது. மாவிலங்கை என்பது தென்னார்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் பகுதியில் மேன்மாவிலங்கை எனவும் கீழமாவிலங்கை எனவும் இரு கூறுற்று வழங்குகிறது எனக் குறிக்கின்றார் ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர் கள். நெல்லமல் புரவின் இலங்கை என்றதனால் இஃது இன்று போலப் பண்டும் நல்ல வளம் பொருந்திய ஊராக இருந்தமை குறிக்கத்தக்கது எனவும் குறிக்கின்றார் அவர். இம்மா விலங்கையின் சிறப்பினை ஆசிரியர் புறத்திணை நன்னா

Сл бот пгт ,

நெல்லரி தொழுவர் கூர்வாண் மழுங்கிற் பின்னை மறத்தோ டரியக் கல்செத்து அள்ள ல் யாமைக் கூன்புறத் துரிஞ்சும் நெல்லமல் புரவின் இலங்கை

எனக் கூறுகின்றார்.

கரும்பனுார் என்பது தொண்டைநாட்டுத் திருவேங்கடக் கோட்டத்தில் உள்ள ஒர் ஊர். திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டு ஒன்று கரும்பனுரர் வண்கண் ஆதித்தன் என்பவனைக் குறிக்கின்றார். இவனை நன்னாகனார் என்னும் புலவர் இணை வரும் பொருநரும் ஆகிய சுற்றத்துடன் சென்று வாழ்த்தியுரைக்கின்றார். இக் கரும்பனுரர் இப்போது கரும்பூர் என வழங்கப் படுகிறது. இக்கரும்பனுார் இயற்கை வளம் நிறைந்தது என்பதனை 384ஆம் பாடல்வழி . அறியலாம்.

உவமைச் சிறப்பு

இலக்கியங்களில் கையாளப்படும் உத்திகளில் உவமையும் ஒன்று. புலவர் தம் உள்ளக் கருத்தை வெளியிடுவதற்கும் , உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும், கருத்திற்கு விரைந்த ஒட்டம் தரவும் , உவமைகள் பயன்படுத்தப்படுகின்றன. புறத்திணை