பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

நன்னாகனார் தம் பாடல்களில் மன்னனின் சிறப்பினை-தன் உள்ள நிலையினை-புரவலர்கள் தந்த பரிசினை-விரித்

துரைக்கின்ற நிலையில் உவமைகளைப் பயன்படுத் து கின்றார்.

ஒய்மான் நல்லியக்கோடனின் புகழ்பாடும்போது அவன் வறுமை தீர்க்கும் தெப்பமாக இருக்கின்றான் என்பதை,

கிரப்படு புனையின்

என்ற உவமைவழி உணர்த்துகின்றார்.

கரும்பனுார் கிழானைச் சிறப்பித்து உரைக்கும்போது அவன் அறைத்துறை அம்பி போல இருந்தவன் எனக் குறிக் கின்றார்.

உறுவருஞ் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை யம்பியின் மான மறப்பின்று இருங்கோள் ஈராப் பூட்கைக் கரும்பனுாரன் காதல் மகனே

எனக் கரும்பனுாரனின் புகழினை அறத்துறை அம்பிக்கு உவமிக்கின்றார்.

தன்னைப் பற்றிக் குறிக்கும்போது தன்னைக் குழந்தை யாகவும் ஒய்மான் வில்லியாதனைத் தாயாகவும் வைத்துப் பாடுகின்ற ஒரு மரபினையும் இவர் பாடல்வழி அறிய முடிகிறது. தான் ஒய்மான் வில்லியாதனைக் காணுதற்கு வந்த நிலையை உரைக்க வருகின்றவர்,

நசைதர வந்தனன் யானே வசையில் தாயில் தூஉங் குழவி போல

என்ற உவமை வழி உணர்த்துவார்.