பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினை நன்னாகனார் பாடல்கள் 59

இவ்வாறே ஓய்மான் நல்லியக்கோடனைக் கண்டு திரும்பு ன்ெற நிலையில் தன் உள்ளத்து மகிழ்ச்சியினை நிறைக் குளப்புதவிற்கு உவமித்துரைக்கின்றார். இதனை,

நிறைக்குளப் புதவின் மகிழ்ந்த னெனாகி

என்ற பாடற் பகுதியால் தெளியலாம்.

புரவலரின் கொடையை இரவலர் போற்றி நிற்கின்ற நிலையில் அவர் அரவு வெகுண்டதைப் போன்ற தேறலை நல்கினர் எனத் தேறலுக்கு அரவின் வெருட்சியைக் கூறுகின் றார். தன்னுடைய வறுமை நிலையை நரகத்திற்கு ஒப்பிட்டு உரைக்கின்ற போக்கினையும் காணமுடிகிறது.

கிரயத் தன்ன வென் வறன்களைக் தன்றே

என்பதனால் இதனை அறியலாம்.

இவ்வாறாகப் புறத்திணை நன்னாகனார் தம் பாடல் களில் உவமைகளைப் பல்வேறு நிலைகளில் படைத்துக் காட்டுகின்றார்.

பண்பாட்டுச் செய்திகள்

புறத்திணை நன்னாகனார் பாடல்கள்வழி அக் காலச் சமுதாயச் செய்திகள் சிலவற்றை அறிய முடிகிறது. ஒய்மான் நல்லியக் கோடனைக் கண்டு வந்த புலவர் அவன் கொடைச் பிறப்பினைக் குறிக்கையில்,

இரவி னானே யீத்தோன் எந்தை

எனக் குறிக்கின்றார். இரவி னானே’ என இரவுப் பொழு திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அக் காலத்தில் இரவுப் போதில் பிறர்க்கென்று ஈயும் வழக்கம் இல்லை. இருந்தும் அவன் நல்கினான் என்ற ஒரு குறிப்புப் புலனாகிறது.