பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

இதனால் அக் காலத்தில் இரவுக் காலத்தில் பிறர்க்கு ஒன்று வழங்கும் வழக்கும் இல்லை என்பது புலனாகிறது.

கரும்பனுார் கிழானிடம் தன் இரும்பேர் ஒக்கலுடன் தங்கியிருந்த புலவர் ஒரு நாள்,

சென்மோ பெரும் வெம் விழவுடை நாட்டென

என வினவுகின்றதால் நாட்டில் விழா நடத்தும் சிறப்பு உண்டென்பதும் புலனாகின்றது. இவர் காலத்திய உணவுப் பொருள்களைக் காணும்போது, தேறல், சூட்டிறைச்சி: பாலிற் பெய்தன, பாகிற் கொண்டன, இக் காலத்தில் புலவு எனப்படும் கொழுஞ்சோறு முதலியன அனைத்தும் வழக்கத் தில் இருந்தமை புலனாகிறது.

அரவு வெகுண் டன்ன தேறலொடு சூடு தருபு என்றதனால் சூட்டிறைச்சியும் தேறுகூடலும் உண்ணப் பட்டமை தெளிவாகிறது.

குறுந்தா ளேற்றைக் கொழுங்கண் கல்விளர்

நறுநெய் யுருக்கி நாட்சோறு ஈயா

என்றதனால் நிணமிட்ட கொழுஞ்சோறும் அக்கால மக்களின் உணவுப் பொருள்களில் ஒன்றாக விளங்கினமையை உணர

முடிகிறது.

கரும்பனுார் கிழான் புறத்திணை நன்னாகனாரையும் அவர்தம் கடும்பு முதல் சுற்றத்தையும் ,

ஊனும் ஊணும் முனையின் இனிதெனப் பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்

ஆகிய இவற்றை நல்கி விடுந்துறத்து ஆற்றினான் என்பதால் க் காலத்தில் ஊன், ஊண், பாலிற் பெய்தன, பாகிற்