பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு’ என்னும் இரண்டாவது கட்டுரை, அப் பொற்கால இலக்கியத்தில் தனித்து ஒளிவிட்டு நிற்கும் பழந்தமிழர்தம் பண்பாட்டுக் கூறுகளை விளக்கி நிற்கின்றது. பொழுது பாறுத்துண்ணும் சிறுமதுகையளான தலைமகளையும், அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் தன்னையும் படம் பிடித்துக்காட்டும் பண்பாட்டுச் சிறப்பினை இரண்டாவது கட்டுரை இயம்பி நிற்கின்றது.

புறத்திணை நன்னாகனார் சங்ககாலத்துப் புலவர். அக்கால இலக்கியச் சிறப்பிற்குப் பெருமை சேர்க்கும்வரை யில் அவர்தம் பாடல்கள் அமைந்திருக்கக் காணலாம். எனவே அவருடைய பாடல்களில் காணலாகும் அரிய செய்தி களைத் தொகுத்துரைக்கும் பாங்கில் புறத்திணை நன்னாகனார் பாடல்கள்’ என்னும் பெயரிய கட்டுரை மூன்றாவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.

முல்லைத்திண்ை’ என்ற தலைப்பினைக் கொண் டுள்ளது நான்காவது கட்டுரை, முல்லை’ என்ற சொல்லிற்கே கற்பு என்பது பொருள். அகத்திணை ஒழு கலாறுகளுள் முல்லை எனப்படும் கற்பு தனியிடம் பெறுவ தாகும். பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லை தொகுமுகை இலங்கெயிறாக நகுமே தோழி நறுந்தண் காரே என்னும் ஒக்கூர் மாசாத்தியாரின் குறுந்தொகைப் பாடலடிகள் ஒரு பெண்ணின் அடிமனத்தாழத் தெழுந்த ஏக்கப் பெரு மூச்சினை எடுத்தியம்புவதாகும்.

திருக்குறளும் சமுதாயமும்’ என்னும் கட்டுரை, சங்ககாலச் சமுதாயத்தினை அடுத்தமைந்த சங்கமருவிய காலச்சமுதாயத்தினைத் தெற்றெனத் .ெ த ரி வா க் கி நிற்கின்றது. சமுதாயப் பிணி தீர்க்கும் மருத்துவராகத் திருவள்ளுவர் இலங்குவதனை இக்கட்டுரை இயம்பி நிற்கின்றது. கார் நாற்பது காட்டும் தலைமகன் பண்புகள் என்னும் ஆறாவது கட்டுரை ஒரு சிறு நூல் ஆடியின் நிழல்