பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் 6 |

கொண்டன ஆகியனவும் பழக்கத்தில் இருந்தமை, புலனா கிறது.

நெல், பொன் முதலியனவும் அக் காலத்தில் மிகுந்து விளங்கினமையை,

நெல்லென்னாம் பொன்னென்னாம் கனற்றக் கொண்ட நறவென்னாம்

என்பதால் தெளிவாகிறது.

கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் சென்று கண்டபோது வெள்ளி தன்னிலை திரிந்து காணப் பட்டது. இருப்பினும் அவர் அதனைக் கண்டு கலங்காது,

அன்னோனை உடையோ மென்ப கனிவறட்கு யாண்டு நிற்க வெள்ளி

எனக் கூறுவதால் வெள்ளிமீன் தன்னிலை திரிவதால் கேடு உண்டாகும் என்ற நம்பிக்கை அக் காலத்தில் இருந்தமையை உணர முடிகிறது.

அக் காலத்தில் தானியங்களைப் பெய்து வைத்தற் கெனத் தனியே ஒரு கூடு இருந்தமையை,

பாணர் ஆடும் அளவை யான்றன்

யாணர் நன்மனைக் கூட்டுமுதல் நின்றனென் என்பதால் தெளியலாம். சமுதாயத்தில் குளம், தெப்பம் முதலியனவும் விளங்கினமையையும் இவர் பாடல்வழி அறிய முடிகிறது.

கிறைக்குளப் புதவின் மகிழ்ந்தன னாகி

அறத்துறை யம்பியின் மான கிரப்படு புணையின்

என்ற பகுதிகள் இக்கருத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இவர் காலத்தில் தெடார் முதலிய இசைக் கருவிகளும் அரிவாள்