பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

போன்ற கருவிகளும் வழக்கத்தில் இருந்தமையையும் இவர் பாடல்வழி அறிய முடிகிறது.

புலவரின் வறுமைக்கோலம்

புலவர் தம்முடைய வறுமைக்கோலத்தை ஒரு பாடலில் மிகத் தெளிவாகக் காட்டுகின்றார். ஒய்மான் நல்லியக் கோடனிடம் செல்லும்போது மெலிந்து, நலிந்து உருத் தெரியாமல் மாறிப் போயிருக்கின்றார். இவருடைய உடை மிகவும் நைந்து கிழிந்து காணப்படுகிறது. பசிப்பினி வாட்டு கின்றது. இவ்வாறாக நிரயத்தன்ன வறுமையில் வாடும் தன் நிலையினை,

பண்டறி வாரா வுருவொ டென்னரைத் தொன்றுபடு துளையொடு படு விழை போகி நைந்து துறை பறைந்த என்னுடை

என்ற பகுதியால் குறிக்கின்றார். பிற பாடல்களில் இதுபோல் வறுமைக்கோலத்தைச் சித்திரிக்கவில்லை எனினும் அவர் களை அணுகித் தம் பசிப்பிணியைப் போக்கிக்கொண்ட மையை மட்டும் குறித்துச் செல்கின்றார்.

இசை ஈடுபாடு

ஒவ்வொரு மன்னனைக் காணச் செல்லும்போது புலவர் தெடார்ப் பறைகொட்டி அவர்தம் புகழினைப் பாடி நிற்பது இசையில் அவர் கொண்ட ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது. ஒய்மான் நல்லியக்கோடனை சிறுநணி யிறந்த பின்றை,

சிதாஅர் வள் பின் தெடாரி தழி இ

அவன் புகழ் பாடி நிற்பது அவர்தம் இசைவன்மைக்குக் காட்டாகிறது. இசை வல்லமையை இவர் கூற்றால் மட்டும் அன்றிக் கரும்பனுார் கிழான் கூற்றாலும் அறிய முடிகிறது.