பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் 6.3

சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி ஊன்சுகிர் வலந்த தென்க னொற்றி விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின் இலம்பாடு அகற்றல் யாவது

எனக் கரும்பனுார் கிழான் வினவுவதால் இவர்தம் இசை வன்மை புலனாகிறது.

இயற்கை ஈடுபாடு

சங்க கால மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்தியவர்கள். புறத்திணை நன்னாகனார் இயற்கையில் நோய்ந்த தம் உள்ளத்தைத் தம் பாடல் பகுதிகளில் வெளிப் படுத்தி நிற்கின்றார். கரும்பனுாரின் நாட்டுச் சிறப்பினை விவரிக்க வருகின்றவர் அதன் இயற்கை நலத்தை அவ்வாறே படம் பிடிக்கின்றார். கரும்பனுார் கிழானின் மென்புலத்தில் மீன் உண்டு பசி தீர்ந்த நாயை வஞ்சி மரத்தின் கிளையில் தங்கி பின் கரும்பின் பூ அருந்த அதன்பால் தங்கும். வரகரிந்த அரிகாலில் வாழும் எலியை யலைக்கும் இயல்பினதாகக் குறும்பூழ்க்கு அஞ்சி அவன் ஊரும் முயல் ஒட அதனால் இருப்பைப் பூ உதிரும்’ என அந் நாட்டின் இயற்கைக் காட்சியை மிக அழகாக விரித்துரைக்கின்றார்.

மென்பா லான் உடன் அணை இ வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை அறைக் கரும்பின் பூ அருந்தும் வன்பாணற் கருங்கால் வரகின் அரிகாற் கருப்பை யலைக்கும் பூழின் அங்கட் குறுமுயல் வெருவ அயல் கருங்கோட் டிருப்பைப் பூவைறக்குந்து

என்ற பகுதி இயற்கையில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த புலவரை நமக்குக் காட்டி நிற்கின்றது.