பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

இவ்வாறே ஒய்மான் வில்லியாதனைக் கானச் சென்றவர் அவனிடம் ,

விண்டோய் தலைய குன்றம் பின்பட

நசை தர வந்தனன்

எனக் கூறுவது குறிஞ்சி நிலக் காட்சியில் ஒன்றிய புலவர்தம் உள்ளத்தைப் படம் பிடிக்கின்றது. கரும்பனுரர் கிழானின் நாட்டுச் சிறப்பினை உரைக்கும்போது,

ஒலிவெள் ளருவி வேங்கட நாடன்

எனக் குறிப்பது அருவி நீரோசையில் தம் உளத்தைப் பறிகொடுத்து வியந்து நிற்கும் புலவரை நம் கண் முன் நிறுத்துகின்றது.

அறிவியல் அறிவு

வெள்ளி என்னும் மீன் தன்னிலை திரிந்து தெற்குத்திசைக் கண் தோன்றின் நாட்டிற்கு நலம் உண்டாகாது என்பது கோள் நிலை அறிந்தோர் கொள்கை. புறத்தினை நன்னாகனாரும் இக்கோள்நிலையை அறிந்த அறிவியல் அறிவு மிக்கவராயிருந்

தமையை, *

அன்னோனை உடையேமென்ப இளிவறட்கு யாண்டு நிற்பினும் வெள்ளி

என்ற பகுதி உணர்த்தி நிற்கின்றது.

அடைவளம்

கவிஞனின் சொல்லாட்சித் திறமைக்கு முன்னோடி களாகவும் , சிந்தனைச் செறிவிற்கு மைல் கற்களாகவும் கவிஞனின் வெளிப்படுந் திறமைக்கும் மொழிப் புலமைக்கும் சான்றாக நிற்பன இந்த அடைகள். மேலும் ஒரு பொருளை