பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் 65

(அல்லது) செயலை மனக்கண் முன் நிறுத்தவும் காட்சிகளின் பண்பை விளக்கவும் கவிதை இன்பம் நல்கவும் உணர்வினை மிகுவிக்கவும் அடைகள் பயன்படுகின்றன. இந்த நிலையில் புறத்திணை நன்னாகனார்தம் பாடல்களில் அடைவளம் சிறந்து நிற்றலைக் காணமுடிகிறது.

கிறைக் குளப் புதவு என்ற சொல்லில் நிறைக்குளம்’ என்றதனால் அக் குளம் நீர் நிறைந்து விளங்கும் இயற்கைக் காட்சியைப் படம் பிடிக் கின்றார்.

வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை

அங்கட் குறுமுயர்

குறுந்தாள் ஏறு என்ற பகுதிகளில் உள்ள அடைகள்வழிச் இயற்கையை நன்கு படம் பிடிக்கின்றார்.

கூர் வாண் மழுங்கு

நன்மனைக் கூடு

திருவுடைத் திருமனை - என்ற பகுதிகளில் உள்ள அடைகள் வழிச் செயற்கைப் பொருள்களைக் கண்முன் நிறுத்துகின்றார்,

சொல்லாட்சிச் சிறப்பு

ஏற்ற சொற்களை ஏற்ற இடத்தில் பெய்வது சொல் லாட்சித் திறத்திற்கு வலிமை சேர்ப்பதாகும். ஒய்மான் வில்லியாதனைச் சென்று காணும் புலவர் தான் அவனைக் காண வந்த முறையைக் கூறும்போது,

கொண்வரல் வாழ்க்கைக் கிணைவன் கூறக்

கேட்டு அதனால் வந்தனம் எனக் கூறுகின்றார். கொண் வரல் வாழ்க்கை’ என்ற ஒரு சொல்லின் மூலம் அக்

மண்.-5