பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

கிணைவனின் வாழ்க்கை முறையை-வாழ்க்கை நிலையை உணர்த்துகின்றார்.

ஒய்மான் வில்லியாதனின் அரண்மனைப் பெருமையைக் கூறும்போது,

திருவுடைத் திருமனை எனக் குறிக்கின்றார். இதனால் ஒய்மான் வில்லியாதனின் அரண்மனை, திருமகளை உடைய செல்வ மனை’ என்பதும் அழகினைத் தன் செல்வமாகக் கொண்ட திருமகளே விரும்பிக் குடியேறியிருக்கும் மனை என்பதும் புறத்தோற்றத் தால் அழகிய மனை என்பதும் பெறப்படுகிறது.

கரும்பனுார் கிழானைப் பற்றிக் குறிப்பிடும்போது கரும்பனுாரன் காதல் மகனே’ எனக் குறிப்பதால் அவன் தன் சிறப்புப் பெறப்படுகிறது. கரும்பனுார் கிழானுக்கு உவமை கூறப்படும் அம்பினை அறத்துறை அம்பு’ எனக் குறித்து அதன் சிறப்பினைக் குறிக்கின்ற நிலையில் கரும்பனுார் காதல் மகனின் அற வாழ்க்கையைப் பெற வைக்கின்றார். இவ்வாறாகப் புறத்திணை நன்னாகனார் பாடலில் பல சிறந்த சொல்லாட்சிகள் காணப்படுகின்றன.

இறுவாய்

புறத்திணை நன்னாகனாரின் நான்கு பாடல்கள்ையும் நோக்கும்போது பெறப்படும் செய்திகள்:

1. புரவலரின் நாட்டுச் சிறப்புப் போற்றி உரைக்கப்படு கிறது.

2. புரவலரின் கொடை வளம் சிறப்பிக்கப்படுகிறது. 3. புலவர்தம் உள்ள உறுதி, உள்ள விழைவு, அவர்தம் புலமைச் செருக்கு, உள்ள மகிழ்ச்சி இவை புலப்படுத்தப்படு கின்றன. -