பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் 67

4. புரவலர்தம் மாண்பினை அறிய முடிகிறது.

5. புலவர் புரவலரை தனித்தும் தம் இரும்பேர் ஒக்கலுடனும் சென்று கண்டமை புலனாகிறது.

6. மாவிலங்கை, கரும்பனூர் என்ற இரண்டு ஊர்களின் சிறப்பினை உணர முடிகிறது.

7. அக்காலச் சமுதாயப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை இவர் பாடல்வழித் தெரிய முடிகிறது.

8. புலவரின் இசைவன்மை, இயற்கை ஈடுபாடு, வறுமைக்கோலம் இவற்றை இப் பாடல்கள் உணர்த்தி நிற்கின்றன.

9. புலவரின் உவமைச் சிறப்பிற்கு-அடை வளத்திற்கு -சொல்லாட்சித் திறத்திற்கு இப் பாடல்கள் நல்ல சான்று களாக விளங்குகின்றன.