பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. முல்லைத்திணை

தோற்றுவாய்

தொன்மைச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் உடையவர்கள் தமிழர்கள். ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுக் கால வரலாற்றைத் தமக்குரியதாகக் கொண்டவர்கள் அவர்கள். அக்காலத்திலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை அகம் புறம் என இரு பிரிவுகளாகப் பகுத்து வாழ்ந்தனர்.

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்பதனால் அகத்தை எழுதிணைகளாகவும் அதற்கேற்பப் புறத்தை எழுதிணைகளாகவும் கொண்டனர் என்பது புலனாகிறது. அகத்திணை ஏழனுள் குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல், பாலை என்ற ஐந்திணை ஒழுக்கமே அவர்தம் பண்பாட்டுச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. இவ் வைந்திணை ஒழுக்கங்களுள் ஒன்றான முல்லைத்திணை பற்றிக் காண்பதே இக் கட்டுரை.

முல்லைத்திணை

காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை எனப் பட்டது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். குறிஞ்சி நிலத்தில் மனிதன் இயற்கையை