பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைத்திணை 69

எதிர்த்து வாழ வேண்டியிருந்தது. மருத நிலத்தில் மனிதன் உழைத்துப் பாடுபட்டு வாழ வேண்டிய குழ்நிலை இருந்தது. நெய்தல் நிலத்தில் பிற நிலங்களை எதிர்பார்த்து வாழ வேண்டியிருந்தது. முல்லை நிலத்தில் மனிதன் இயற்கையை எதிர்பார்த்து நம்பி வாழ வேண்டியிருந்தது எனக் குறிக் கின்றார் டாக்டர் மு.வ. அவர்கள் (முல்லைத்திணை, ப.1)

மனிதன் காட்டுமிராண்டியாய் இருந்த நிலைமாறி அவன் நாகரிகம் பெற்றுக் கூட்டமாகக் கூடி வாழ்ந்தது முல்லை நிலத்தில்தான். எனவேதான் முல்லைநிலத்து ஆயர்கள் ஆநிரைகளை மேய்க்கும் கோல் அரசனுடைய ஆட்சிக்குரிய கோலாகியது. எனவே மக்கள் இனமாய்க்கூடி நாகரிகத்தை வளர்த்த இடம் முல்லை நிலம் என்பது தெளிவாகிறது.

முதற்பொருள்

தொல்காப்பியனார் ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருள்களை முதல், கரு, உரி என மூன்றாக்கிக்

கூறுகின்றார்.

மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேங் தன் மேய திம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்றதனால் முல்லைக்குரிய நிலம் காடுறை உலகம் என்பது பெறப்படுகின்றது.

வரையே சுரமே புறவே பழனர். திரையே அவை அவை சேர் தரு மிடனே என வீரை வகைத் தனையியல் கிலமே என்ற நம்பியகப் பொருள் நூற்பாவும் புறவும் புறவைச் சார்ந்த இடமும் முல்லை எனக் குறிக்கின்றது.