பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

முல்லைக்குரிய பெரும்பொழுதாகக் கருதப்படுவது கார்காலம். சிறுபொழுது மாலை.

காரும் மாலையும் முல்லை

என்பது தொல்காப்பியம்.

மல்குகார் மாலை முல்லைக்குரிய

என்பது நம்பியகப் பொருள்.

கருப்பொருள்

தெய்வம், பொருள், விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், பண் முதலியனவும் பிறவும் ஒவ்வொரு திணைக்கும் உரிய கருப்பொருள்களாகக் கருதப்படும்.

நெடுமால் குறும்பொறை நாடன் தோன்றல் வடுவில் கற்பின் மனைவி கிழத்தி இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர் கான வாரணம் மான்முயல் பாடி குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை நிறங்கிளர் தோன்றி பிறங்கலர்ப் பிடவம் கொன்றை காயா மன்றலங் குருந்தம் தாற்றுக் கதிர் வரகொடு சாமை முதிரை ஏற்றுப்பறை முல்லை யாழ்சா தாரி சாமை வரகு தாமுடன் வித்தல் அவைகளை கட்டல் அரிதல் கடாவிடல் செவிகவர் கொன்றைத் தீங்குழல் ஊதல் மூவின மேய்த்தல் சேவினர் தழுவல் கழுமிய குரவையொடு கான்யாறு என்றிவை முழுதுடன் ஆடல் முல்லைக் கருப்பொருளே. என்ற நம்பியகப் பொருள் நூற்பாவினால் முல்லைத்திணைக் குரிய கருப்பொருள்கள் இன்னின்ன என்பதைத் தெளியலாம்.