பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைத்திணை 7 I

உரிப்பொருள்

முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகும்.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேருங்காலைத் திணைக்குரிப் பொருளே

என்ற தொல்காப்பிய நூற்பாவினாலும்,

புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றின் கிமித் தமும் எனவாங்கு எய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தே

என்ற நம்பியகப் பொருள் நூற்பாவினாலும், முல்லைக்

குரிய உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்பதைத் தெளியலாம்.

பொருள் காரணமாகவும் வேந்துவினை காரணமாகவும் தலைமகன் தலைமகளைப் பிரிந்து செல்கிறான். செல்பவன் திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழும் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் செல்கிறான். சென்ற தலைமகனின் வருகையை எதிர்பார்த்து அவன் வரவில் அவன் சொல்லில் நம்பிக்கை வைத்து அவன் பிரிவை ஆற்றி யிருத்தலே இருத்தல் எனப்பட்டது. இதுவே முல்லைத் திணையின் உரிப்பொருளாகியது.

முல்லை என்பதற்குக் கற்பு எனவும் பொருள் கூறுவர். முல்லை சான்ற கற்பின் மெல்லியல்’ என்றெல்லாம் மகளிர் போற்றப்பட்டனர். கற்பு என்பதற்குக் கல்போன்ற எனவும், இல்வாழ்க்கைக்கு உரியன கற்று கற்ற நெறியில் நிற்றல், சொல் திறம்பாமை என்றெல்லாம் பொருள் கூறப்படுகிறது. இங்கு சொல் திறம்பாமையே முல்லை என்பதற்குப் பொருத்த மான பொருளாக அமைகிறது.