பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைத்திணை 73

ஆங்கிலத்தில் முல்லை

ஆங்கில இலக்கியத்திலும் முல்லைப்பாடல்கள் உண்டு. அவற்றைப் பாடிய புலவர்களும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து தாம் கண்டவற்றையே பாடியுள்ளனர். “அப்பாடல் களைக் குறித்து வாஷிங்டன் இர்வின் என்பவர் புகழும்போது மற்ற நாடுகளின் முல்லைப் பாடல்களைப் பாடியவர்கள் இயற்கையை என்றோ ஒருமுறை சென்று கண்டு பொதுவான எழிலை மட்டும் அறிந்தவர்களாகவே காணப்படுகின்றனர். ஆனால் ஆங்கிலப் புலவர்களோ இயற்கையோடு கலந்து வாழ்ந்து திளைத்தவர்கள். கண்ணுக்கெட்டாத இயற்கை யின் நுட்பங் கள்ையும் நெருங்கிக் கண்டு பழகியவர்கள். இயற்கையின் நுண்ணிய திருவிளையாடல்களையும் துருவிக் கண்டவர்கள் என்கிறார்” எனக் குறிக்கின்றார் டாக்டர் மு.வ.

தமிழில் அமைந்த முல்லைத்திணைப் பாடல்களைப் போல ஆங்கிலத்தில் தலைவன் தலைவியரின் கற்பொழுக்கம் போற்றப்படவில்லை. நகர வாழ்க்கையிலிருந்து தப்பி ஓடி நாட்டுப்புறத்தின் நலங்களைத் துய்த்தல், ஆடம்பரத் தொல்லைகளிலிருந்து விலகி எளிமையின் இனிமையில் மகிழ்தல், கவலையும், பரபரப்பும் மிக்க வாழ்க்கையைத் துறந்து கவலையற்ற அமைதியான வாழ்வை நாடுதல் இவைகளை அடிப்படையாகக் கொண்டே முல்லைநிலப் பெண்களின் காதல் முதலியன புனைந்து உரைக்கப்படு கின்றன. முல்லைநிலத்து ஆயர்வாழ்வு ஆங்கிலப் பாடல் களில் வருகின்றன என்றும் அவர்கள் இத்தாலி நாட்டு ஆயர்களாகவே உள்ளனர் என்றும் அதனாலேயே குளிர் மிகுந்தது இங்கிலாந்து என்பதையும் மறந்தவர்கள் ஆயர்கள் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். இன்னும் சில பாடல்களில் ஆடு மாடு முதலிய சொற்கள் எல்லாம் நேர்ப்பொருளை உணர்த்தாமல் உருவகப் பொருளையே உணர்த்துகின்றன. ஆதலின் அவை முல்லைத்தினைப்