பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைத்திணை 75

நி ைற ந் த காடு பொலிவுற்றதாக முல்லைப்பாட்டு எடுத்துரைக்கின்றது.

செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடல் குவிமுகை யங்கை யவிழத் தோடார் தோன்றிக் குருதி பூப்பக் கானம் நந்திய செங்கிலப் பெருவழி

-முல்லைப்பாட்டு விதை விதைக்கும் ஆயர் பலபடியாக உழுதுள்ளனர். உழுத பழங்கொல்லைப் புழுதியில் உள்ள ஈரிய இலைகள் நிரம்பிய வரகின் கவைத்த கதிர்களைக் கலைமான் கள் உண்கின்றன. உண்டபின் அவை மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின்கண் விளையாடி மகிழ்கின்றன. இத்தகைய இனிய காட்சியினையுடையது முல்லை நிலம் என்பதை,

விதையர் கொன்ற முதையற் பூமி இடுமுறை கிரப்பிய ஈரிசி வரகின் கவைக் கதிர் கறித்த காமர் மடப்பிணை அரலை யங்காட்டு இர லையொடு வதியும்

ԿՈD6Aվ -நற்றிணை 121

என்ற அடிகள் சித்திரிக்கின்றன.

முல்லை நிலம் பல நறிய மலர்கள் நிறைந்த அழகிய காட்சியினை உடையது என்பதை,

பழம ழைக் கலித்த புதுப்புன வரகின் இரலை மேய்ந்த குறைத் தலைப் பாவை

இருவி சேர் மருங்கிற் பூத்த முல்லை வெருகுசிரித் தன்ன பசுவ மென்பிணிக்

குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவு என்ற குறுந்தெகைப் பாடல் (222) குறித்து நிற்கின்றது.