பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 6 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

கண்ணியல் அஞ்சனம் தோய்ந்த போற் காயாவும் நுண்ணரும் பூழத்த புறவு – 47; morf 8

பவழஞ் சிதறியவை போலக் கோபந் தவருந் தகைய புறவு கார் . 5

அணர்த்தெழு பாம்பின் தலைபோற் புணர்கோடல்

பூங்குலை கின்ற புறவு д, гггѓ. 11

செல்வர் மனம்போற் கவினின்ற நல்கூர்ந்தார் மேனிபோற் புல்லென்ற காடு - கார். 18

. 를 를 நல்லார் இளங்லம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம்போல் பூத் தன காடு கார், 22

என்ற கார்நாற்பது பாடல் பகுதிகளினாலும் முல்லை நிலத்தின் கவின்மிகு காட்சியைக் கண்டு களிக்கலாம்.

இவ்வாறாக முல்லைத்திணைப் பாடல்கள் பல முல்லை நிலத்தின் வளத்தினை எடுத்துரைப்பனவாகத் திகழ்கின்றன. இனி முல்லைநிலத்தின் பெரும் பொழுதாகக் கருதப்படும் கார்காலச் சிறப்பை முல்லைத்திணைப் பாடல்கள் போற்று மாற்றைக் காண்போம்.

கார்காலத் தொடக்கம். இரவு முழுவதும் விடாத மழை. காலைப் பொழுதில் உழவர்கள் தத்தம் நிலத்தில் சென்று ஏர் பூட்டி செம்மண் பூமியின் புழுதி மேலும் கீழும் சென்றிடுமாறு உழுதொழில் செய்தனர். உழுத நிலத்தில் விதைத்த வரகு களின் முளைகள் மேலே தெரிந்தன. உழவர்கள் தங்கள் தலைமேல் ஒலைக்குடையைப் பிடித்துத் தொழில் செய்த காட்சி அங்கிருந்த கலைமான்கள் பரந்து திரிவதுபோல் காட்சி அளித்தது. பறை ஒலிக்க உழவர்கள் களையைக் களைய, களைந்தபின் வரகு செழித்து வளர்ந்துவிட்டது. இரண்டிரண்டாகப் பிளந்து காணப்பட்ட கதிர்களை மயில்