பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைத்திணை 77

கள் பறித்து உண்டன. அந்த நீல நிற மயில்கள் அழகிய தோகையைப் பரப்பிக் குருந்த மரத்தின் வளைந்த கிளைகளில் ஏறியிருந்து அகவிய ஒலி கிளி ஒப்பும் மகளிரின்

ஒலிபோல் இருந்தது. அத்தகைய கார்காலம் இது.

பேருறை தலைஇய பெரும்புலவர் வைகறை ஒர் இடம் படுத்த இருமறுப் பூழிப் புறமாறு பெற்ற பூவல் ஈரத்து ஊன் கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால் வித்திய மருங்கின் விதைபல நாறி இரலை நன்மான் இனம்பரந் தவைபோல் கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர் கறங்குபறைச் சீரின் இறங்க வாங்கிக் களை கால் கழி இய பெரும்புன வரகின் கவைக்கதிர் இரும்புறம் கது உ உண்ட குடுமி நெற்றி நெடுமாத் தோகை காமர் கலவம் பரப்பி ஏமுறக் கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த வல்லிலைக் குருந்தின் வாங்குசினை இருந்து களிகடி மகளிரின் விளிபடப் பயிரும் கார்மன் இதுவால் ....... ங் த து

கார்காலத்தின் தோற்றத்திற்கு முல்லை மலர்கள் மலர்ந்து நிற்றலே அறிகுறி என்பதை உணர்த்துவது போன்று பல பாடல்கள் காணப்படுகின்றன.

பெயல்புறங் தந்த பூங்கொடி முல்லை தொழுமுகை இலங்கெயிருக நகுமே தோழி நறுந்தண் காரே

-குறுந்தோகை : 1.26

எனக் காரைச் சிறப்பித்துரைக்கின்றார் ஒக்கூர் மாசாத்தியார்.