பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

தண்குளிக் கேற்ற பைங்கொடி முல்லை முகை தலை திறந்த காற்றம் புதல்மிசைப் பூவமல் தளவமொடு தேங்கமழ் கழல வம்பு பெய்யுமார் மழையே வம்பு அன்று கார் இது

என்ற பாடலும் கார்காலத்தில் முல்லை மலர்கள் மலர்தலைக் குறித்து நிற்கின்றன.

அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் தலைகாட் செருந்தி தமனிய மருட்டவும் கடுஞ்சூன் முண்டகம் கதிர்மணி கழாலவும் நெடுங்காற் புன்னை கித்திலம் வைப்பவும்

பைங்கனை அவரை பவழங் கேர்ப்பவும் கடுகனைக் காயா கனமயில் அவிழவும் கொழுங் கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும் செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்

-சிறுபாணாற்றுப்படை 146-156

கார்காலம் சிறந்து .ெ பா லி ந் து விளங்கினமையைச் சிறுபாணாற்றுப்படை புலப்படுத்துகிறது.

இனி முல்லைத்திணைக்குரிய சிறுபொழுதாகிய மாலைக் காலம் பெறும் இடத்தினைக் காண்போம்.

மேகம் கடலினது நீரைக்குடித்துப் பின்னர் மலைகளி னிடத்தே தங்கியிருந்து உலகத்தை வளைத்தெழுந்த விரைந்த செலவினையுடைய முகில் பெரிய மழையைப் பெய்த சிறுபொழுதாய புல்லிய மாலைக்காலம் என மாலை யின் சிறப்பினைப் பாடுகின்றது முல்லைப்பாட்டு.

நனந்தலை யுலகம் வளைஇ நேமியோடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்