பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைத்திணை 79

பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு

கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை

-முல்லைப்பாட்டு 1.6

தலைமகன் பிரிவினால் வாடும் தலைமகனுக்கு மாலைப் பொழுது புன்கண் மாலையாகத் தோன்றுகிறது.

ஆம்பற் பூவின் சாம்ப என்ன கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ முன்றி னுணங்கல் மாந்தி மன்றத் தெருவில் நுண்டாது குடைவன ஆடி இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலை

என மாலைப்பொழுது துன்பம் மிக்கதாகத் துலங்குவதை எடுத்துக்காட்டுகின்றாள்.

பையுள்மாலை புலம்புகல் மாலை பெரும்புகல் பாலை சிறுபுகல் மாலை பழங்கண் மாலை புன்கண்மாலை மருளின் மாலை அருளில் மாலை கையறு மாலை புலம்பொடு வந்த புன்கண் மாலை............ கையற வந்த மையல் மாலை

என மாலைப்பொழுது துணையிலோர்க்குத் துன்பம் தரும் நிலையினைச் சங்கப் பாடல்கள் குறிக்கின்றன.

இன்றுயில் வதியுகற் காணாள் துயருழந்து நெஞ்சாற்றுப் படுத்த நிறை தபு புலம்பொடு டுேகினைந் தேற்றியும் ஓடுவளை திருத்தியும் மையல் கொண்டு மொய்யென உயிர்த்தும் ஏவறு மஞ்ஞையின் நடுங்கி யிழைநெகிழ்ந்து பாவை விளக்கிற் பரூஉச் சுடர் அழல