பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

இடஞ் சிறந்து உயரிய எழுகிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி இன்பல் இமிழிசை யோர்ப்பனள் கிடந்தோள்

  • H. 壘 -- என்ற முல்லைப்பாட்டுப் பகுதி தலைமகனைப் பிரிந்து வாடும் தலைமகளைக் கண்முன் நிறுத்துகின்றது.

கின்னே போலும் மஞ்ஞை ஆலகின் கின்னுதல் நாளும் முல்லை மலர கின்னே போல மாமருண்டு நோக்கி கின்னே உள்ளி வந்தனென் நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே

என்ற தலைமகன் தலைமகளைக் காணத் துடிக்கும் அவன் உள்ளத்து ஆர்வத்தினைப் புலப்படுத்துவதாகத் திகழ்கிறது.

இன்னும் அன்றைய வரலாற்றுச் செய்திகளையும் பண்பாட்டுச் செய்திகளையும் அறிய உதவுவனவாக முல்லைத் திணைப் பாடல்கள் திகழ்கின்றன.

புறத்துறைப் பாடல்களில் முல்லை

அகத்திணைப் பாடல்களில் மட்டும் அன்றி புறத்துறைப் பாடல்களிலும் முல்லை என்று பெயர் பெற்ற துறைகள் பல காணப்படுகின்றன. ஏறத்தாழ இருபது முல்லைத் துறைகள் புறப்பொருள் வெண்பா மாலையில் இடம் பெறுகின்றன.

அவை,

1. அரச முல்லை : மன்னனது இயல்பு மிகுதியைக் கூறுவது.

2. அவையமுல்லை : அறங்கூறு அவையத்துச் சான்றோர்

இயல்பு கூறியது.

3. இல்லாள் முல்லை : கணவனைத் தொழுது எழும்

மனைவிளக்கின் இயல்பு கூறியது.