பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைத்திணை 81

4. ஏறாண் முல்லை . மறக்குடியின் ஒழுக்கம் கூறுவது.

5. கணிவன் முல்லை : காலக் கணிதனுடைய திறத்தைப்

புகழ்ந்து சொல்லியது.

6. கற்பு முல்லை : 1. தலைவன் தலைவி நலத்தைப்

பாராட்டி உரைப்பது,

2. கணவன் பிரியினும் மகளிர்க்குரிதாய நிறை

காவலைக் கூறியது.

3. தலைவன் மனைவளத்தைத் தலைவி வாழ்த்துதல்.

7. கார் முல்லை : தலைவர் வினைமுற்றி மீளும் முன்னர்

முகில் நீரை முகந்து கொண்டு வந்தது கார் முல்லை.

8. காவல் முல்லை : 1. தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிக் கமழ்தார் மன்னவனின் காவலை மிகுத்துக் கூறியது.

2. காவலியல்பினைத் தக்காங்குப் பிறர் எடுத்துக்

கூறுவதும் காவல் முல்லையாம்.

9. குடை முல்லை : மொய் தாங்கிய முழுவலித் தோட

கொய்தாரானின் குடையைப் புகழ்ந்து கூறுவது.

10. சால்பு முல்லை : வ ா ன் ேற ா யு ம் மலை யன்ன

சான்றோர்தம் இயல்பினைக் கூறுவது.

11. தேர் முல்லை : ஒன்னாரின் வலியை அடக்கி மீண்டு

வரும் மன்னரின் வருகையைக் கூறுவது.

மண்.-6