பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

12.

13.

i 4.

15.

16.

17.

18.

19.

20.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

நாண் முல்லை : கொழுநனைப் பிரிந்தாள் ஒருத்தி தனது நாணே காவலாக வறுமையினிடத்திருந்து தன்னைக் காத்துக் கொண்டது.

பகட்டு முல்லை : பகடு போன்று உலகிற்குப் பயன் படும் வேளாளனுடைய இயல்பு மிகுதியைக் கூறியது.

பார்ப்பன முல்லை : கான்மலியும் நறுந்தெரியற் கழல்வேந்தர் இகலவிக்கும் நான்மறையோன் நலம் பெருகும் நடுவுநிலை உரைத்தது.

பால் முல்லை : அரிபாய் உண்கண் ஆயிழைப் புணர்ந் தோன் பரிவுகல் உள்ளமொடு பால் தெய்வத்தை வாழ்த்திக் கூறியது.

பேராண் முல்லை . மறவர்கள் உளம் புகலக் களம் கொண்ட வேந்தனின் சிறப்பினை எடுத்துரைப்பது.

மறமுல்லை : வெள்வாள் .ே வ ண் டி ய தீயவும் கொள்ளா மறவனின் கொதிப்பினை உரைத்தது.

முல்லை : தடவரை மார்பன் தன்னமர் காதல் மடவரல் புணர்ந்த மகிழ்ச்சி நிலையை எடுத்துக் கூறுவது.

மூதில் முல்லை : அடல்வேல் ஆடவர்க்கு அன்றி அவ்வில் மடவரல் மகளிர்க்கும் உள்ள மறம் மிகுதியை எடுத்துரைப்பது.

வல்லாண்முல்லை . மறவன் ஒருவனின் இல்லும் பதியும் ஆகியவற்றின் இயல்பினைக் கூறி அவனது நல்லாண்மையை எடுத்துரைப்பது.