பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

சிறப்பான வாழ்க்கையே சமுதாயத்தின் சிறப்பாகும். தனி மனித வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாகவும் ஊக்குவிக்கி யாகவும் விளங்குவது கடவுள் நம்பிக்கை. இறை வலியுறுத்தும் திருவள்ளுவர்,

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றா டொழாஅ ரெனின்

திருக்குறள்: கடவுள் வாழ்த்து : 2

என்று கூறுகின்றார். ஒருவனுடைய கல்வியின் பயன் கடவுளினது இணையில்லா அடிதொழலே என்பது திண்ணம். கடவுளுக்கு இணையாகப் போற்றப்படும் தன் குல முன்னோர் க ைள யு ம் ஒருவன் போற்றி வணங்கவேண்டும். இஃது அன்பின் அடிப்படையிலும் ந ன் றி யு ண ர் ச் சி யி ன் அடிப்படையிலும் தேவையானதாகும். அதை இல் வாழ்க்கை அதிகாரத்தில் முற்றுத்துறந்த முனிவரது .ெ ப. ரு ைம ைய யு ம் அவரைப் போற்றிக்கொள்ளு மாற்றையும் திருவள்ளுவர் விரிவாகப் பேசுகின்றார். நல்ல நூல்களில் அவர்கள் போற்றப்படவேண்டும் என்பதை,

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிபு

திருக்குறள்; நீத்தார் பெருமை : 1 என்னும் குறட்பாவில் சுட்டிச்செல்கிறார். இப்பெரியோர்கள் வலியுறுத்தும் அறம் அனைவரும் பின்பற்ற வேண்டியதாகும். அறம் என்பது அகச்சார்பானதா? புறச்சார்பானதா?

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற H

-திருக்குறள்: அறன் வலியுறுத்தல் : 4

என்ற மனத்தால் தீங்கில்லாதவனாக விளங்குதலே அடிப்படைத் தேவை என்பதை விளக்குகின்றார். இது போன்ற இடங்களில் திருவள்ளுவரின் சிறப்புத் தெளிவாகப்