பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் சமுதாயமும் 87

புலனாகின்றது. மனத்தால் தூயவனாக விளங்கினால் புறச் செயல்களும் தூயனவாக விளங்கும் என்பது அறிவியலை யொட்டிய உண்மையாகவும் அமைகின்றது. மேலும் பொது நிலையில் சுட்டியுள்ளதால் எக்காலத்தாருக்கும் எந்நாட்டின ருக்கும் உரிய கருத்தாகவும் விளங்குகின்றது. அவ்வறம் என்பது என்ன?

அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு மிழுக்கா வியன்ற தறம்

-திருக்குறள், அறன் வலியுறுத்தல் : 5

என்னும் குறட்பாவில் பிறராக்கம் கண்டு பொறாமை, இன்பமொழி, கோபம் கடுஞ்சுடுசொற்கள் இவை தவிர்ந்த செயல்களே அறம் ஆகும் என்று விளக்குகிறார். இவற்றைத் தவிர்த்து ஒருவன் இருப்பானேயானால் அவன்மாமனிதனாக விளங்குதல் கண்கூடு. மேலும் இவை பின்பற்ற முடியாதன என்று சொல்லவும் இயலாது. ஏனெனில் இவை ஒரு மனிதனின் அடிப்படை நற்குணங்களாகும். இவற்றை ஒவ்வொருவரும் பின்பற்றினால் நாடும் வீடும் நன்னிலையில் விளங்குவது உறுதி.

ஒவ்வொருவருடைய வாழ்நாளும் வளர்ந்து வரும்போது சமூகக் கடமைகளும் மாறிமாறி வருகின்றன. குழந்தைப் பருவம், குமரப்பருவம், பெற்றோர்நிலை, முதிர்ச்சிநிலை ஆகியவை இயல்பாக அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படும் ஒன்றாகும். இனிமைத் தன்மையைக் கூறும்போது,

குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்

-திருக்குறள்; புதல்வரைப் பெறுதல் : 6 என்று குழந்தையால் பெறும் இன்பத்தை விளக்குகிறார் திருவள்ளுவர். மக்கள் தங்கள் பெற்றோர்க்குச் செய்யும் கைம்மாறு யாது? இதற்கு,