பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o

& 8 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனைச்

சான்றோ னெனக்கேட்ட தாய். |

-திருக்குறள்: புதல்வரைப் பெறுதல் : 9

மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.

-திருக்குறள்; புதல்வரைப் பெறுதல் : 1.0

என்னும் குறட்பாக்களில் விடை கூறுகின்றார் திருவள்ளுவர். இவ்விரண்டு பண்புகளையும் இளைஞர்கள் பெற்றுவிட்டால் பெற்றோர்களும் மற்றோர்களும் நிறைவான வாழ்க்கை வாழலாம் என்பது திண்ணம். தம் மக்கட்குப் பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கும்போது,

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல்.

-திருக்குறள்: புதல்வரைப் பெறுதல் : 7

என்று கற்றோர் அவைகளில் முந்தியிருக்கச் செய்யும் பணியைப் பெற்றோர்களின் பணியாகத் திருவள்ளுவர் விளக்குகின்றார். பெற்றோர்களின் கண்காணிப்பே குழந்தை களின் சரியான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது என்பதை அனைவரும் அறிவோம்.

தனி மனிதர்களின் நடத்தையில் சிறப்பாகப் பின்பற்றி நடக்க வேண்டியது பிறனில் விழையாப் பேராண்மையாகும். உலகத்தில் அனைத்துமே காமத்தின் அடிப்படையில் நிகழ்வது என்பது அறிஞர்களின் தெளிவு. ஆயின் அது மிகு காமமாகக் காமவெறியாக மாறும்போது சமுதாயத் தால் பழிக்கப்படுகின்றது; வெறுக்கப்படுகின்றது. அச் செயலைச் செய்வோரும் பழிக்கப்பட்டு வெறுக்கப்படு கின்றனர். மக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகூறும் திருக்குறள் பிறன்மனை நயத்தல் என்னும் சமுதாயப் பெருநோயை வன்மையாகக் கண்டிக்கின்றது.