பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் சமுதாயமும் 89

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.

-திருக்குறள்; பிறனில் விழையாமை : 1.0 என்று திய செயல்கள் எல்லாவற்றிலும் தீயது பிறன்மனை நயத்தல் என்பதை விளக்குகின்றார் திருவள்ளுவர்.

சமூக ஒருங்கிணைவில் அனைத்துச் செயல்களும் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்கின்றன. ஒருவரை யொருவர் நம்புவதற்கு அனைவரிடமும் வாய்மையும் பொய்கூறா நல்லியல்புகளும் அமைந்திருக்க வேண்டும். சமுதாயத்தைப் பீடித்துள்ள நோய்களுக்கு மருந்தளிக்கும் சமுதாய மருத்துவராகத் திருவள்ளுவர் விளங்குவதால் அந்நோய்களைச் சுட்டிக்காட்டி அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள்ையும் சுட்டிக் காட்டுகின்றார்.

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

-திருக்குறள்; வாய்மை 3 என்று பொய்கூறுதலைத் தவிர்க்கச் சொல்லும் திருவள்ளுவர்

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்.

-திருக்குறள்; வாய்மை : 2 என்று கூறித் தனது, உலகத்தோடு ஒட்டிக் கருத்துகளைக் கூறும் பாங் ைக ப் புலப்படுத்துகின்றார். இதுதான் திருவள்ளுவர் மற்ற நீதி நூலாசிரியர்களிடமிருந்து வேறுபட்டுச் சிறந்து நிற்பதாகும்.

வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுக்

தீமை யிலாத சொலல்

-திருக்குறள்; வாய்மை : 1

என்று வாய்மையை விளக்கிக் காட்டுகின்றார் திருவள்ளுவர். தான் பெரிதும் உரைப்பதான,