பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

யாமெய்யாக் கண்டவற்று வரில்லையெனைத் தொன்றும் வாய்மையி னல்ல பிற.

-திருக்குறள்; வாய்மை : 10

என்னும் திருக்குறளைப் படைத்தளித்துள்ளார்.

மனிதன் மனிதனாக வாழ வேண்டும். அவ்வாறு அவனை வாழவிடாது மனிதத் தன்மையிலிருந்து இறுக்கி விலங்கு நி ைல க் கு க் கொண்டு செல்வனவற்றுள் தலைமையானது கோப உணர்ச்சி. இதனை வெகுளாமை’ என்னும் அதிகாரத்தில் விரிவாகச் சுட்டிச் செல்கின்றார் திருவள்ளுவர். ஒருவன் மற்றொருவனுக்குச் சினம் ஏற்படா வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் சினத்தைத் துாண்டுமாறு ஒருவன் தன்னிடம் நடந்து கொண்டாலும் அதைப் பொறுத்து அருள வேண்டும் என்பது திருவள்ளுவர் திருவுள்ளம். வெகுள்ாமை என்னும் அதிகார விளக்கத்தில் பரிமேலழகர் சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன்மாட்டுளதாயவிடத்தும் அதனைச் செய்யாமை என்று கூறுவதும் இங்குச் சிந்திக்கத்தக்கது. தனக்கு மெலியார், வலியார் ஆகிய எவரிடத்தும் வெகுளாமை வேண்டும் என்பது திருக்குறள் கூறும் நடத்தையியல்.

மறத்தல் வெகுளியை யார்மட்டுந் தீய பிறத்த லதனான் வரும்.

-திருக்குறள்; வெகுளாமை : 3

என்று தீமைகளுக்கெல்லாம் காரணம் சினம் என்பதை விளக்கிக் காட்டுகின்றார்.

சினமென்னுஞ் சேர்ந்தாரைச் கொல்லி யினமென்னு மேமப் புணையைச் சுடும்.

-திருக்குறள்; வெகுளாமை : 6

என்னும் குறட்பாமூலம் தனது உய்வினைத் தடுக்கும் தடை யாகச் சினத்தை உருவகப்படுத்தி, சினம் ஆனது தன்னைச்