பக்கம்:மதன கல்யாணி-1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மதன கல்யாணி

உணர்வையும் மறந்தவனாய், கனவு நிலைமையில் இருப்பவன் போல நடந்தான். இருவரும் கட்டிடத்தின் தாழ்வாரத்தில் ஏறியவுடனே, புன்சிரிப்போடும், ஆழ்ந்த கருத்தோடும் கிழவி மைனரது முகத்தை நோக்கி, “நீர் வரும்போது நரியின் முகத்தில் விழித்துவிட்டு வந்தீர் போலிருக்கிறது. நீர் நல்ல அதிர்ஷ்டசாலிதான். ஆனால் மூலஸ்தான தெய்வத்தின் தயவு ஏற்பட்டவுடனே சுற்றுக்கோவில் தெய்வத்தை எவரும் கவனிக்கிற வழக்கமில்லை; சொன்ன சொல்லை மறந்து விடாதேயும்; இப்படி வாரும்” என்று அவரை நடத்திக் கொண்டு, ஒர் அறைக்குள் நுழைந்து, அதன் ஒரு மூலையில் காணப்பட்ட மெத்தைப்படிகளின் வழியாக ஏறி மேலே இருந்த உப்பரிக்கையை அடைந்தாள். அவ்விடத்தில் காணப்பட்ட ஒரு விடுதிக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தனர். அது மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சோபாக்கள், நிலைக் கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகள், படங்கள், பூத் தொட்டிகள், பதுமைகள் முதலிய சகலமான வசதிகளும் செளகரி யங்களும் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. இரண்டு மின்சார விளக்குகள் விண்மணிகள் போல சுடர் விட்டெரிந்து கொண்டிருந் தன. மின்சார விசிறி ஒன்று சுழன்று, ஜிலுஜிலென்ற காற்றை சுகமாகக் கொடுத்துக் கொண்டிருந்தது. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டிருந்த அந்த சயனக் கிரகத்தை அவர்கள் அடைந்த உடனே கிழவி மைனரை நோக்கி, “ஐயா! இது தான் ரதிதேவியின் ஆஸ்தான மண்டபம்; சோபாவில் உட்கார்ந்து கொள்ளும். என்னுடைய எஜமானி, தன் உடைகளை மாற்றிக் கொண்டு இருக்கிறாள்; இதோ வந்து விடுவாள்” என்று கூறிய வண்ணம் அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டாள். தனிமையில் விடப்பட்ட மைனர், ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டான். அவனது இருதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது. மோகாவேசத்தினால் கைகள் கால்கள் முதலிய அவனது அங்கங்கள் யாவும் வெடவெட என்று நடுங்கின. வி.பி. ஹாலில் நெடுந்துரத்தில் ஜெகஜ்ஜோதி போலத் தோன்றித் தனது அறிவையும் பஞ்சேந்திரியங்களையும் கொள்ளை கொண்ட அந்தப் பேரின்ப வடிவம் அடுத்த நிமிஷம் தனக்கருகில் வரப் போவதையும், தான் அதற்கு மேல் அடைய இருக்கும் நிகரற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/108&oldid=646986" இலிருந்து மீள்விக்கப்பட்டது