பக்கம்:மதன கல்யாணி-1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. மதன கல்யாணி

அவள் “என்னை பாலாம்பாள் என்று சொல்லுவார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட மைனர் மிகவும் சந்தோஷம் அடைந்தவனாய், “அடாடா என்ன என்னுடைய மெளடீகத்தனம். உன்னை நான் ஒவ்வொரு நாளும் நாடக மேடையில் பார்த்து ஆனந்தக் கூத்தாடி இருந்தும், இப்போது அடையாளம் கண்டுகொள்ளாமல் போய் விட்டேனே! ஆகா! என்னுடைய அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! ஜனங்களுள் பெரும்பாலோர் பாலாம்பாளுக்குத்தான் ஆட்டத்திலும் அழகிலும் முதன்மை கொடுக்க வேண்டும் என்று சொல்லி அடிக்கடி சச்சரவு செய்வதை நான் கண்டிருக்கிறேன்; மோகனாங்கி மேலானவள் என்று சிலர்தான் சொல்லுகிறார்கள். எனக்கு எப்படி இருந்ததென்றால் அவளைக் காணும் போது அவளே மேலாள வளாக இருந்தாய். இருவரையும் ஒன்றாகக் காணும் போதெல்லாம் இருவரும் ஒருவர்க்கொருவர் தோற்றதில்லை. அப்படி இல்லா விட்டால், அயன் ஸ்திரி வேஷத்தில் உனக்கு ஒரு பாகமும் அவளுக்கு ஒரு பாகமும் கொடுத்து நடிக்கச் செய்திருக்க மாட்டார்கள் அல்லவா” என்று கூறிய வண்ணம் தனக்கருகில் வைர மோதிரங்கள் மின்ன தந்தக் குச்சிகள் போலக் காணப்பட்ட அழகிய விரல்களைக் கொண்ட அவளது இடக்கரத்தை மெதுவாகத் தனது வலக்கரத்தால் பிடித்தான்.


7-ம் அதிகாரம் நண்டுக்குத் திண்டாட்டம்

அதன் பிறகு அந்த பங்களாவில் நிகழ்ந்த அற்புத சம்பவங் களையும், மாரமங்கலம் மைனர் பொழுது விடியும் வரையில் அனுபவித்த பரமாநந்த சுகத்தையும் பற்றி விரிவாகக் கூறும் முன், வேறோரிடத்தில் நிகழ்ந்த சில விஷயங்களை வெளியிடுதல் அவசியமாக இருக்கின்றது.

அன்று பகலில் மைனர், ஆலந்துர் வரையிற் சென்று அம்பட்டக் கருப்பாயியோடு பழக்கம் செய்து கொண்டு மாலை ஏழு மணிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/112&oldid=646995" இலிருந்து மீள்விக்கப்பட்டது