பக்கம்:மதன கல்யாணி-1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 107

விஷயங்களுக்கு உன் தமையனார் எப்படி இடங்கொடுக்கிறார்? இந்த துர்நடத்தை எல்லாம் அத்தையம்மாளுக்குத் தெரியுமா? சங்கதிகளைக் கேட்கக் கேட்க, எனக்கு நிரம்பவும் கஷ்டமாக இருக்கிறதே” என்று பெரிதும் சஞ்சலத்தோடு கூறினான்.

உடனே கண்மணியம்மாள், “ஒரு சூளைச் செங்கலும் பிடாரிகள்” என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள், அது போல, யாராவது ஒருவர் யோக்கியராக இருந்தால், அவர் இந்த நடத்தையைக் கண்டிக்க சாத்தியப்படும். என்னுடைய தமயனாரே அவரைக் கூட்டியனுப்பும் போது அவரிடம் நான் முறையிட்டுக் கொள்வது கசாப்புக்காரனிடம் ஆடுகள் முறையிடுவது போன்றது தான். அவர்கள் இந்த விஷயமாகப் பேசிக் கொண்டிருந்த பல சமயங்களிலும் நான் அத்தையம்மாளிடம் சொல்லி இருக்கிறேன். அவர்களும் அந்த சம்பாஷணைகளைக் கவனித்திருக்கிறார்கள். கவனித்தும், அவர்கள் எனக்கே புத்திமதி சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்து விடுகிறார்கள். இந்தக் கலியுகத்தில் ஏகபத்தினி விரதமுடைய மனிதனே இருக்க மாட்டானாம். இவரை விட்டு வேறொரு யெளவனப் புருஷரைக் கட்டிக் கொள்ள ஏற்பாடு செய்தால், அவர் வெளிப்பார்வைக்கு யோக்கியராக இருப்பாராம். அவரோடு நெருங்கிப் பழகினால், அவரும் ஸ்திரீ விஷயத்தில் வரம்பில் நிற்பவராக இருக்க மாட்டாராம். தவிர, பெரிய சமஸ்தானத்துப் பிள்ளைகள் எல்லாம் இப்படித்தான் இருப்பார் களாம். பெண்டுகள் அதைக் கவனிக்கக் கூடாதாம். கலியாணத்துக்கு முன், மைனர் துரை ஒடியாடிக் கெட்டலைந்து எல்லாச் சுகங்களை யும் பார்த்து விடுவதே நல்லதாம். ஏனென்றால், அதன் பிறகு அவருடைய மனசு வெளியில் செல்லாதாம். அப்போது அவர் என்னிடத்திலேயே உறுதியாக இருந்து விடுவாராம்; அத்தையம் மாள் தங்களுக்குத் தெரிந்த ஏதோ நியாயத்தைச் சொல்லுகிறார்கள். அது என் மனசுக்குத் திருப்தி உண்டாக்கவில்லை. இத்தனை வருஷ காலமாக இந்த பங்களாவில் பழகும் ஒரு மனிதரிடத்தில் எனக்கு ஓர் அணுவளவும் பிரியமும் மதிப்பும் உண்டாகர்திருந்தால் அது யாருடைய குற்றம் என்று சொல்லுகிறது? நெடு நாளாக வாசலில் காத்திருக்கும் கேவலம் ஒரு நாயைக் கண்டால், அது நம்மோடு நெடுங்காலம் பழகிய ஜீவன் என்னும் ஓர் அன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/125&oldid=647020" இலிருந்து மீள்விக்கப்பட்டது