பக்கம்:மதன கல்யாணி-1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 10 மதன கல்யாணி

அதைக் கேட்ட மதனகோபாலன் சிறிது தயங்கிய பின், “நீ உயிர்வான மனப்போக்கை உடைய பேதை ஆகையால், நீ விரும்பும் புருஷன் எல்லா விஷயங்களிலும் மேம்பட்டவராகவே இருப்பார் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகமில்லை. அவர் யார் என்பதை என்னிடம் தெரிவிக்கலாம் என்ற நம்பிக்கை உன் மனதில் ஏற்படுமானால், நீ விவரத்தைத் தெரிவிக்கலாம். இந்த விஷயத்தில் என்னால் இயன்ற உதவியைச் செய்ய நான் ஆயத்தமாக இருக்கிறேன்” என்றான்.

அந்தச் சமயத்தில் வாசற்பக்கத்தில் திடீரென்று தோன்றிய மீனாகூஜியம்மாள் மிகுந்த கோபத்தோடு கண்மணியையும், மதனகோபாலனையும் கூர்ந்து நோக்கி, “ஒஹோ! காரியம் இவ்வளவு துரத்துக்கு வந்துவிட்டதா அடே மதனகோபாலா! எழுந்திருந்து வெளியில் போ; உனக்குச் சேர வேண்டிய சம்பளத்தைச் சேவகனிடம் கொடுத்தனுப்பி விடுகிறேன். இனிமேல் நீ இந்த பங்களாவுக்குள் அடிவைக்கக் கூடாது. பெண் உன்னிடம் வீணை கற்றுக் கொண்டதும் போதும். நீ அவளுக்குத் தரகு போனதும் போதும்; எழுந்திரு” என்று கண்டித்துக் கூறிக் கூச்சலிட அடுத்த நிமிஷம் துரைராஜாவும் அங்கே வந்து சேர்ந்தான்.


8-ம் அதிகாரம்

விந்தையும் நிந்தையும் i எதிர்பாராத கொடிய சொற்களைக் கேட்ட மதனகோபாலன் திடுக்கிட்டு வியப்பும் திகைப்பும் அச்சமும் அடைந்தவனாய் சரேலென்று எழுந்து நின்று, அவர்களுக்கு என்ன மறுமொழி கூறுவது என்பதை உணராமல் தயங்கித் தலை குனிந்து சிறிது நேரம் மெளனமாக நின்றான்; அதற்குள் அவனது மனதில் சிறிதளவு துணிவு ஏற்பட்டது. அவன் தனது சிரத்தை மெல்ல உயர்த்தி மீனாகூஜியம்மாளை நோக்கிப் பணிவாக, “அம்மணி! மிகவும் பொறுமையோடு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடிய தாங்கள், இப்படிக் கோபித்துக் கொண்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/128&oldid=647025" இலிருந்து மீள்விக்கப்பட்டது