பக்கம்:மதன கல்யாணி-1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† : 6 மதன கல்யாணி

நாற்காலியில் உட்கார்ந்த போது, மதனகோபாலன் தான் தாமதமாக வந்தது பற்றி பெரிதும் லஜ்ஜை அடைந்தவனாய் நிரம்பவும் வணக்கமாகவும் கம்பீரமாகவும் கல்யாணியம்மாளை நோக்கி, “வழக்கம் போல சரியான காலத்தில் வரவேண்டும் என்றே நான் புறப்பட்டேன். இடைவழியில் உடம்பில் சில பாதைகள் ஏற்பட்டதனால் நான் இங்கே வர கொஞ்சம் தாமதமாகி விட்டது. இன்றைக்கு வராமலே இருந்துவிட வேண்டிய நிலைமையில் நான் இருந்தேன். இருந்தாலும் தாங்கள் காத்திருப்பீர்கள் ஆகையால் நான் இங்கே வந்து காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று வந்தேன்” என்று விநயமாகக் கூறினான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த வளாய்த் தனது மனதில் எழுந்த பலவகையான சங்கடங்களை மறைத்துக் கொண்டு, அவனை நோக்கி, “அடடா உடம்பு அசெளக்கியமாய் இருந்தால், நாளைக்கு வந்திருக்கலாமே; இப்போது என்ன அவசரம் முழுகிப் போகிறது? அப்படியானால், இன்றைக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டாம். நாளைக்குப் பார்த்துக் கொள்வோம். பெட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் உன்னுடைய வீட்டில் விடச் சொல்லுகிறேன். நீ போ அப்பா!” என்று மிகுந்த அன்போடும் உள்ளார்ந்த வாஞ்சை யோடும் கூறவே, அதைக் கேட்ட மதனகோபாலன் “பாதக மில்லை; இப்போது உடம்பு வழக்கப்படி சரியான நிலைமைக்கு வந்து விட்டது. வந்தது தான் வந்தேன் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து விட்டுப் போகிறேன்” என்று மறுமொழி கூறிவிட்டு ஒவ்வொருவராக வீணையை வாசிக்கும்படி கூற, முதலில் கோமள வல்லி முதல் நாள் கற்றுக் கொண்ட பாடத்தை வீணையில் வாசிக்கத் தொடங்கினாள். மதனகோபாலன் தனது தொடையில் வலக்கரத்தால் தாளம் போட்டுக் இடக்கரத்தை நீட்டி, விரல்களால் தடவும் நயங்களைக் காட்டிக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் கையில் புஸ்தகத்தோடு நாற்காலியில் உட்கார்ந்திருந்த கல்யாணி யம்மாள் தனது முழுக் கவனத்தையும் மதனகோபாலனது வடிவத்திலேயே செலுத்தி இமை கொட்டாது தனது கடைக் கண்ணால் அவனை நோக்கிய வண்ணம் உட்கார்ந்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/134&oldid=647038" இலிருந்து மீள்விக்கப்பட்டது