பக்கம்:மதன கல்யாணி-1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 125

நுழையாத தனது அந்தப்புரத்திற்குள் காலடியோசை உண்டானதை உணர்ந்து திடுக்கிட்டு மருண்டு சரேலென எழுந்து பார்க்கவே, சிறிது தூரத்தில் மதனகோபாலன் சென்றதைக் கண்டு வியப்பும் திகைப்பும் அடைந்தவளாய் ஒரு நிமிஷ நேரம் ஸ்தம்பித்து உற்று நோக்கினாள்; தனது கண்களுக்கெதிரில் காணப்படுவது உண்மை யான வடிவமோ, அல்லது, தனது மனத்திலிருந்த நினைவினால் பிரதிபிம்பித்த மானசீகமான பொய்த் தோற்றமோ என்று சந்தேகித்தவளாய் அவள் சிறிது நேரம் தயங்கினாள். அடுத்த நொடியில் அது உண்மையான காட்சியென்று நிச்சயித்தவளாய் அவள் சரேலென்று மஞ்சத்தை விட்டுக் கீழே இறங்கிய வண்ணம், தனது கையை, மெதுவாகத் தட்டி, “மதனகோபாலா! இப்படி வா, போகலாம் என்று அதிகாரமாகக் கூறினாள்.

எதிர்பாராத அந்தக் குரலைக் கேட்ட மதனகோபாலன் திடுக்கிட்டு திக்பிரமை கொண்டு, அது கல்யாணியம்மாளது அந்தப்புரம் என்பதை உணர்ந்து கொண்டவனாய் தான் செய்த பெரும் பிழையைப்பற்றி அவள் தன்னைத் திருடன் என்றும் அயோக்கியன் என்றும் மதித்து தன்னை எவ்விதமான அவமானத்திற்கு ஆளாக்கு வாளோ என்ற அச்சம் எழுந்து அவனது உடம்பை முற்றிலும் குன்றச் செய்தது. அந்த தினம் தனக்கு மிகவும் பொல்லாத நாள் என்ற ஒர் எண்ணம் மின்னல் தோன்றி மறைவது போல அவனது மனதில் தோன்றியது. கண்மணியம்மாளது பங்களாவில் சம்ப வித்ததைப் போல் அந்த மாளிகையிலும் தனக்கு ஏதாகிலும் தீங்கு நேருமோ என்ற பயத்தினால், அவனது சரீரம் கிடுகிடென்று ஆடியது. என்றாலும், தான் உடனே அப்பால் போய்விடுவது சந்தேகத்திற்கு இடங்கொடுக்கும் என்று நினைத்தவனாய் அவன் கல்யாணியம்மாள் நின்ற பக்கம் திரும்பி தனது சிரத்தைக் கீழே கவித்த வண்ணம், “அம்மணி! மன்னிக்க வேண்டும்; வழி தவறி இங்கே வந்து விட்டேன். உண்மையான சங்கதி” என்று நிரம்பவும் பணிவாகவும் அந்தரங்கமான விசனத்தோடும் கூறினான்; அதற்கு அவள் எவ்வித மான மறுமொழி கூறுவாளோ என்ற பெருந் திகிலினால் அந்த ஒரு நொடி நேரமும் பயங்கரமான ஒரு பெருத்த யுகம் போல இருந்தது. அவனது சொல்லைக் கேட்ட கல்யாணி யம்மாள் கோபம் கொண்டவள் போலக் காட்டிக் கொள்ளாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/143&oldid=647054" இலிருந்து மீள்விக்கப்பட்டது