பக்கம்:மதன கல்யாணி-1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் j43

மோகனாங்கியையும் மறந்து, அன்றிரவின் முற்பகுதியில் தான் அடைந்த பெருதுன்பங்களை எல்லாம் நினையாமல் அவளுக் கருகில் உட்கார்ந்து அவளது கரத்தைப் பற்றினான்.

அவன் தனக்கருகில் வந்து உட்கார்ந்து கொள்ளும் வரையில், தனது அழகிய வசனங்களினாலும், அதரங்கள், மார்பு முதலிய வற்றின் சேஷ்டைகளான மோகனாஸ்திரங்களினாலும், கைகளின் சாகசங்களினாலும், அவனது மதியை மயக்கி அவனைத் தனது வலையில் வீழ்த்திய பாலாம்பாள், அவனிடம் தனது கையை மாத்திரம் தந்தி பேசும் பொருட்டு கொடுத்துவிட்டு, தனது தேகத்தை சிறிது அப்பால் நகர்த்திக் கொண்டவளாய் மிகவும் நாணம் அடைந்தவள் போல நடித்து அவனைப் பாராமல் எதிர்ப் பக்கத்தில் வெறுவெளியில் தனது பார்வையை நிறுத்தி பெருத்த வேதாந்தம் பேசத் தொடங்கினவளாய், “அடாடா! கடவுளின் திருவிளையாட்டை என்னவென்று சொல்வது அடுத்த நிமிஷத்தில் என்னவிதமான சம்பவம் நேரப்போகிறதென்பது மனிதருக்குத் தெரியாமல் அல்லவா. ஈசுவரன் மறைத்து வைத்திருக் கிறான்? நான் பிறந்து பதினாறு வருஷகாலமாகிறது. எத்தனையோ மகா ராஜாதி ராஜர்கள் எல்லாம் இந்தக் கையைத் தொடுவதற்கு தங்களுடைய உடல் பொருள் ஆவி ஆகிய எல்லாவற்றையும் கொடுப்பதாகச் சொல்லி படாத பாடுபட்டுப் பார்த்து பயனற்றுத் திரும்பிவிட்டார்கள்; மன்மதனைப் பழித்த மகா சுந்தர புருஷர்கள் எல்லாம் என்னுடைய வாயிலிருந்து ஒரு சொல் வராதா என்று என்னுடைய வீட்டு வாசலில் காத்திருந்து காலொடிந்து திரும்பிப் போகிறார்கள். இதோ இந்த நாடகத் தலைவர் என்னைத் தமது இருதயகமலத்தில் வைத்து சதா காலமும் பூஜித்து, இமைகள் கண்மணிகளைக் காப்பது போல என்னை அல்லும் பகலும் காத்து, ஆபரணங்களிலும் சுகபோகங்களிலும் செல்வத்திலும் செல்வாக்கிலும் என்னை மூழ்கச் செய்து, தாம் தேடும் பெருந்திரவி யங்களை எல்லாம் என் கால்டியில் கொட்டி நான் காலால் இடுவதை தலையால் செய்து தாகாதுதாசனாக இருந்து வருகிறார்: ஆனால், அவருக்கு நான் ஆசை நாயகியாக இருந்து வருகிறேன் என்று வெளியுலகம் நினைத்துக் கொண்டிருச் அவ்வளவு தூரம் பாடுபடும் கிழவருக்கு அந்த ஒரு பெருமைய்ர்கிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/161&oldid=649602" இலிருந்து மீள்விக்கப்பட்டது