பக்கம்:மதன கல்யாணி-1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 151

படுகிறாய்? நான் தான் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டு வருகிறேனே. உனக்கு எவ்விதமான ஆதாரம் வேண்டுமானாலும் இப்போதே செய்துகொள்; மனதில் உள்ளதை வெளியிடாமல் ஏன் வளைத்து வளைத்துப் பேசுகிறாய்? நாம் அக்கினி சாட்சியாகக் கலியாணம் செய்து கொள்ள முடியாதென்பதை நீயே ஒப்புக் கொள்கிறாய். நான் உன்னையே சம்சாரமாக என் ஆயுசு காலம் முடிய பாவிப்பேன் என்பது சத்தியம். அந்தப்படி எழுத்து மூலமாக ஒரு பத்திரம் எழுதிக் கொடுக்கச் சொன்னாலும் நான் .இப்போதே எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்றான்

அதைக் கேட்ட பாலாம்பாள், “வாய்பேச்சு காலக்கிரமத்தில் போகக்கூடியது. எழுத்து மூலமான உறுதியே நிரந்தரமாக இருக்கக் கூடியது. அப்படி எழுதிக் கொடுப்பதில் வித்தியாசம் ஒன்றும் இல்லை. நான் என்ன கேட்கிறேன்? தங்களுடைய அன்பும் பாசமும் எப்போதும் மாறாமல் இருக்க வேண்டும் என்று தானே நான் கேட்டுக் கொள்ளுகிறேன். வாய்மூலமாக இப்போது தாங்கள் சொல்வதை எழுத்து மூலமாக எழுதிக் கொடுக்கப் போகிறீர்கள். இதில் கெடுதல் என்ன இருக்கிறது? தாங்கள் சொன்ன சொல்லுக் குக் கட்டுப்பட வேண்டும் என்ற நிர்ணயம் உள்ளவர்களாக இருந்தால், இதைக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பதைப் பற்றித் தாங்கள் கொஞ்சமும் கவலைப்பட மாட்டீர்கள்” என்று வெண்ணெயில் ஊசியை நுழைப்பது போல நயமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட மைனர் மிகவும் ஆத்திரமாக “எங்கே? காகிதம் மைக்கூடு முதலியவை இருந்தால் எடு; இப்போதே எழுதிக் கொடுக்கிறேன். பேச்சை வீணாக வளர்க்க வேண்டாம் என்றான்.

அவள் இரவில் பலரிடம் பிராமிசரி நோட்டுகளும் பத்திரங்களும் எழுதி எழுதி வாங்கி நிரம்பவும் அதுபோகம் உள்ளவள் ஆதலால், மேஜையில் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த காகிதங்களில் இருந்து எட்டனா முத்திரைக் காகிதம் ஒன்று, மை, இறகு, அடியில் வைத்துக் கொள்ள ஒர் அட்டை முதலியவற்றை எடுத்து மைனரிடம் வைக்க, அவன் காகிதத்தையும் இறகையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டு, “எங்கே? நீயே சொல்; நான் அப்படியே எழுதித் தருகிறேன். நீ கொஞ்சமும் யோசனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/169&oldid=649610" இலிருந்து மீள்விக்கப்பட்டது