பக்கம்:மதன கல்யாணி-1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$56 மதன கல்யாணி

என்ற ஆவல் கொண்டவனாய், சொல்லவும். மாட்டாமல், சொல்லாமல் இருக்கவும் மாட்டாமல், பல்லவி பாட விரும்பும் ஊமையனைப் போல, தத்தளித்து இன்பமோ துன்பமோ என்று அறிய இயலாத நிலைமையிலிருக்க, பாலாம்பாள் அந்தக் காரியத்தை முடித்துக் கொண்டு பஞ்சணையி லேறி அவனுக்கு அருகில் உட்கார்ந்து சந்தோஷமாகப் புன்னகை செய்த வண்ணம், “இப்போது நம் இருவரையும் பார்த்தால் யாரைப் போல இருக்கிறது? எங்கே? சொல்லுங்கள் பார்க்கலாம். நீங்கள் சரியான மறுமொழி சொல்லிவிட்டால் எவருக்கும் கிடைக்காத ஒரு பெருத்த வெகுமதி உங்களுக்குத் தரப் போகிறேன்” என்று கிள்ளை போல மழலையாக பேசிக் கொஞ்சினாள். அவளது மொழியைக் கேட்ட மைனர் நகைத்து, “ரதியையும் மன்மதனையும் போல இல்லையா? இதற்குச் சந்தேகம் என்ன? எங்கே? வெகுமதியைக் கொடு” என்று தனது முழு ஆத்திரத்தையும் வெளியிட்டு, அவளைப் பிடித் தணைக்க முயல, அவள் அதற்கு மேலும் இடையூறு செய்வது கூடாதென நினைத்து, பேசாது, தனது தேகத்தை அவன் வசமாக்கி விட்டாள்.

மைனரது துரதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வது! அதே நொடியில், சொல்லி வைத்தது போல, அந்தச் சயன அறைக்கு வெளியில் பங்களாவிற்குள், “திருடர் திருடர் ஐயோ! அப்பா! வெட்டுகிறார்களே குத்துகிறார்களே!” என்ற பெருத்த கூக்குரல் திடீரென்று எழுந்தது. பாலாம்டாளது வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் மொத்தத்தில் அறுவர் அந்த பங்களாவிலேயே இரவில் படுத்திருப்பது வழக்கம். அந்த அறுவரும் ஒன்று கூடிப் பெருத்த ஆரவாரம் செய்வதாகத் தெரிந்தது. இரதியாகவும் மன்மதனாகவும் நடித்துக் கொண்டிருந்த மைனரும் பாலாம்பாளும் திடீரென்று உண்டான அந்தக் கூக்குரலைக் கேட்டுப் பெருந் திகிலும் குலைநடுக்கமும் கொண்டு ஒருவரை ஒருவர் மறந்து பிரமித்து அசைவற்றுப் போயினர்; அவர்களது உடம்புகள் கிடுகிடென்று ஆடுகின்றன. பேரச்சம் உச்சி மயிரைப் பிடித்து உலுக்குகிறது. வியர்வை வெள்ளமாக ஒழுகுகிறது. ஒருவரோடு ஒருவர் பேசவும், ஒருவர் பக்கம் ஒருவர் தமது முகத்தைத் திருப்பவும் அஞ்சி இருவரும் இரண்டு உயிரற்ற பதுமைகள் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/174&oldid=649616" இலிருந்து மீள்விக்கப்பட்டது