பக்கம்:மதன கல்யாணி-1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதன கல்யாணி


1-ம் அதிகாரம்

உல்லாச புருஷர்கள்

சீமைச் சரக்குகளும் புதிய நாகரிகங்களும் அன்னிய நாடுகளினின்று நேராக வந்திறங்குவதான சிறப்பு வாய்ந்த சென்னை மாநகரின் தென்மேற்கு பாகம் தேனாம்பேட்டை என்ற பெயரால் குறிக்கப்பட்டு வருகிறது. அது சுமார் இரண்டு மயில் நீள அகலம் பரவியதாகவும் ஆயிரக்கணக்கான அழகிய பங்களாக் களைக் கொண்டதாகவும் இருக்கிறது. சென்னையில் பெருத்த உத்தியோக பதவியை வகித்த ஐரோப்பிய துரைமார்களும், இந்திய வக்கீல்களும், ஐரோப்பிய வர்த்தகர்களும் அந்தப் பங்களாக்களில் வசித்ததன்றி, சென்னை ராஜதானியின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள முக்கியமான சில சமஸ்தானத்து ஜெமீந்தார்களும், போலி மகாராஜாக்களும் ஏராளமான தங்களது செல்வத்தைச் செலவிட்டு நவநவமான சுகபோகங்களை எல்லாம் அனுபவித்துக் குதுகலமாகத் தங்களது பொழுதைப் போக்கும் பொருட்டு இங்கு வந்து பங்களாக்கள் வாங்கி அவற்றில் வசித்து வந்தனர். அவைகளில் மனோகரமான அழகிய பூச்செடிகள் நிறைந்த சோலைகளும், மரங்கள் அடர்ந்த தோப்புகளும், தாமரை, அல்லி, நீலோற்பலம் முதலியவை தவழ்ந்த தடாகங்களும், வாவிகளும் பெரும்பாலும் சூழ்ந்து, அவற்றில் வசிப்போர்தாம் இருப்பது மண்ணுலகத்திலோ விண்ணுலகத்திலோ என்று சந்தேகிக்குமாறு நறுமனந் துவித் தீங்கனி உதிர்த்துக் குளிர்ச்சியும் இன்பமும் கொள்ளையாகச் சொரிந்து சிங்காரமாய் விளங்கின. ரிஷியின் ஆசிரமம் எனத் தகுந்த இத்தகைய வனமாளிகை ஒன்றனுள், ஒரு நாள் மாலைப் பொழுதில் இந்தக் கதை தொடங்குகிறது. -

அப்போது சூரியன் மேற்றிசையில் மறையும் தருணத்தில் இருந்தான். அவனது அழகிய செங்கிரணங்கள் அந்தச் சோலையின் ம.க.1-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/19&oldid=649632" இலிருந்து மீள்விக்கப்பட்டது