பக்கம்:மதன கல்யாணி-1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 173

நான் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அதிலிருந்து இல்லாத அருத்தம் எல்லாம் செய்து கோபித்துக் கொள்ளுகிறதே வழக்கமாகி விட்டது; கிழவன் என்று நான் சொன்னது தவறு. குமரனாகவே இருக்கட்டும்; இங்கே நடந்த விஷயம் என்ன என்பதை எங்களிடம் தெரிவிக்கலாமானால், தெரிவியுங்கள். வீண் ஆட்சேபனை சமாதானம் எல்லாம் எதற்கு?” என்றாள்.

அப்போது கல்யாணியம்மாளுக்கு அருகில் நெருங்கி நின்ற கோமளவல்லி உண்மையான பயபக்தி விசுவாசத்தோடு தனது தாயை நோக்கி, “அம்மா குழந்தைப் புத்தியினால் அக்காள் ஏதோ சொல்லி விட்டாள்; கூடிமித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவாகவும் நயமாகவும் கூறினாள். அவளது நற்குணத்தையும் கபடமற்ற நடத்தையையும் கண்ட கல்யாணியம்மாளது கோபம் உடனே தணிவடையவே, அவள் கோமளவல்லியை நோக்கி, அன்பான குரலில் பேசத்தொடங்கி, “வீணை மண்டபத்தில் இருந்து மதனகோபாலன் வீட்டுக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டு எவ்வளவு நாழிகை ஆயிருக்கும்” என்று கேட்டாள்.

கோமளவல்லி, அந்தக் கேள்வியின் உட்கருத்தை உணராமல், “இப்போது தான் புறப்பட்டுப் போனான்; கால் நாழிகை ஆயிருக்கும்” என்று வியப்போடும் கூறினாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “சரி, அங்கே இருந்து புறப் பட்டவன் நேராக இங்கே வந்து விட்டான் போலிருக்கிறது!” என்றாள். அந்த வாக்கியத்தைக் கேட்ட மடந்தையர் இருவரும் திடுக்கிட்டு வியப்பும் திகைப்பும் அடைந்து, “ஆ! அவனா இங்கே வந்தவன்” என்று ஆச்சரியத்தோடு வினவினார்கள். கல்யாணியம் மாள் உற்சாகத்தோடு நகைத்துக் கொண்டவளாய், “அவனே வந்தவன்! அவனே தாறுமாறாகப் பேசினவன்! அவனே இப்போது ஒடினவன்!” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறினாள்.

கோமளவல்லி, “என்ன ஆச்சரியம் வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனவன் இங்கே எப்படி வந்தான்?” என்றாள்.

துரைஸானி, தான் போவதாக அம்மாளிடம் தெரிவிக்கும்படி என்னிடம் சொல்லிவிட்டுப் போனவன் இங்கே வரவே காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/191&oldid=649634" இலிருந்து மீள்விக்கப்பட்டது