பக்கம்:மதன கல்யாணி-1.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#78 மதன கல்யாணி

துரைஸானி:- நம்முடைய அம்மாள் சொன்னபடியே எல்லாம் நடந்திருக்கும் என்று நீ நம்புகிறாயா?

கோமளவல்லி (மிகுந்த வியப்போடு):- என்ன அப்படிக் கேட் கிறாயே! நடக்காத சங்கதியை அம்மாள் சொல்லுவார்களா?

துரைஸானி:- சொல்லத்தான் கூடாது. அதிருக்கட்டும். இந்த மதனகோபாலன் நம்முடைய அம்மாளைக் காட்டிலும் வயதில் மிகவும் யெளவனப் பருவம் அழகும் வாய்ந்த எத்தனையோ பெண்களோடு பழகி வீணை கற்றுக் கொடுக்கிறானே. அவர்கள் எவரிடத்திலும் அவனுக்கு ஆசை உண்டாகாமல், இவ்வளவு வயதான நம்முடைய அம்மாள் மேல் அவன் ஆசைப்பட்டு இப்படிப் பைத்தியம் கொள்ளப் போகிறானோ! அதை நீ யோசித்தாயா?

கோமளவல்லி:- அம்மாளென்ன அவ்வளவு வயதான கிழவியா? இப்போது தானே முப்பத்து நான்கு வயதாகிறது. அவ்வளவு வயதானாலும், அம்மாள் நம் எல்லோரையும் விட அழகாக இருக்கிறார்கள் அல்லவா?

துரைஸானி:- அதெல்லாம் உண்மைதான். மதனகோபாலனுக்கு இப்போது சுமார் பதினெட்டு வயதிருக்கலாம். அவன் இயற்கையி லேயே மிகவும் நாணமுள்ள மனிதன்; பெண் பிள்ளைகளைக் கண்டால், நடுநடுங்கி நாலுகாத தூரம் ஒடுகிற சுபாவம் உடையவன். நம்முடைய அம்மாளோ மகா கம்பீரமும் அமர்த்தலும் நிறைந்த வர்கள். அப்பேர்ப்பட்ட குணமுடைய சிறிய பையன் இப்படி தலைகால் தெரியாமல் மோகம் கொண்டு பிதற்றி, தான் கொலை செய்து கொள்ளுவதாகச் சொல்லுவானா? இது ஒரு நாளும் நடக்காத காரியம். இதில் என்னவோ சூது நடந்திருக்கிறது; அம்மாள் நம்மிடம் சரியானபடி உண்மையைத் தெரிவிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

கோமளவல்லி:- அப்படியானால், அம்மாள் நம்மிடத்தில் ஏன் பொய் பேச வேண்டும்?

துரைஸானி:- உன்னிடம் எதைச் சொன்னாலும், நீ ஏன் ஏன் என்றே கேட்கிறாய். சில சூசனைகளைக் கொண்டு ஒரு விஷயத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/196&oldid=649639" இலிருந்து மீள்விக்கப்பட்டது