பக்கம்:மதன கல்யாணி-1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 மதன கல்யாணி

நடந்து கொண்டிருந்தது. அவள் பிறந்த நாள் முதல் அத்தனை வருஷகாலமாக ஏக சக்கராதிபதியாய் இருந்து, தனது சித்தமே சட்டமாக நிறைவேற்றி வந்த அந்தப் பெண்ணரசியின் மனது என்றைக்கும் இல்லாதவாறு அன்று புண்பட்டு முறிந்து போனது பற்றி அவள் கொண்ட ஆங்காரமும் கோபமும் மண்ணையும் விண்ணையும் நிரப்பக் கூடியதாக இருந்தன. அவளது உடம்பு அப்போதும் துடிதுடித்துக் கொண்டிருந்தது. மனமோ அடங்காமல் பொங்கி எழுந்து கொந்தளித்தது; அதனால் அவளது இருதயம் வெடித்துவிடுமோ என்னும் நிலைமையில் இருந்தது. அவளது மனதில் பலவகைப்பட்ட எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அவள் நெடுமூச்செறிந்த ஒவ்வொரு முறையும், எழுந்து தணிந்த அவளது வனப்பு வழிந்த மார்பு படீரென்று தெறித்துக் கிழிந்து போகுமோ என்னலாம்படி கட்டுக்கடங்காத மூர்க்க குணம் உடையதாக இருந்தது. மதனகோபாலனது அதி சுந்தரவடிவம் அவளது மனதைவிட்டு நீங்காமலே பதிந்து நின்றுவிட்டது. அவன் மீது அவள் கொண்டிருந்த அன்பும் உருக்கமும் அப்போதும் அடிக்கடி தலைக்காட்டின ஆனாலும் அவன் தன்னை அவ்வளவு துரம் அலட்சியம் செய்து அவமரியாதையாக நடத்தும்படி ஆனதே என்ற ஆத்திரமும் கோபமும், அதற்காக அவனுக்கு ஏதேனும் தீங்கிழைக்க வேண்டும் என்ற பதைப்பும் விலக்க ஒண்ணா வகையில் அவளது மனதில் பொங்கி எழுந்து, அவனது விஷயத்தில் அவள் அதுகாறும் கொண்டிருந்த பிரியத்தை எல்லாம் சிதற அடித்தன. அது நிற்க, அவளது மனதில் இன்னொரு பெருத்த பீதியும் எழுந்து வதைக்க ஆரம்பித்தது. தனக்குச் சம்பந்தியாக வரப்போகும் மீனாகூ யம்மாளது பங்களாவிலும், இன்னம் பல ஜெமீந்தார்களது பங்களாக்களிலும் அவன் சென்று வீணை பயிற்றுவிப்பவன் ஆதலால், தனக்கும் அவனுக்கும் தனிமையில் நடந்த சம்பாஷணை முதலிய விவரங்களை அவன் ஒருகால் அவர்களிடம் வெளியிட்டு விடுவானோ என்ற கவலையே பெருத்த கவலையாக எழுந்து அவளைத் துயிலவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அவன் அவ்வாறு விஷயங்களை வெளியிடுவா னாகில் அதனால் தனக்குப் பெருத்த மாணஹானி நேருவதன்றி தனது பிள்ளைக்கும் பெண்களுக்கும் கலியாணம் நடப்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/200&oldid=649644" இலிருந்து மீள்விக்கப்பட்டது